Pages

Thursday, July 7, 2011

காதல் எங்கு சென்று கொண்டிருக்கிறது...

கண்ணால் கண்டு
பக்கமோ தூரமோ
பார்வைகளால் பரிமாறப்பட்ட காதல்
இன்று எங்கு சென்று கொண்டிருகிறது...

காதலை கண்கள் கடத்திய
காலம் சென்று இன்று அதை
காமம் கடத்திக்கொண்டு இருக்கிறது
ஓஹோ இதுதான் காதலா ?

காதலர்தினம் என்று இன்று
வெட்டவெளிகளில் விரசங்கள்
காதலில் காமம் பார்த்த காலம் சென்று
காமத்தில் இன்று காதலை காணமுடியவில்லையே

காதலர்தினம் என்பதன் அர்த்தம்தான் என்ன
உண்மையான அன்பை இரு இதயங்கள்
பரிமாரிகொள்ளும் ஒவ்வொரு நாளும்
காதலர்தினம் தானே....

பக்குவபட்ட முதல்காதலை
மறக்கமுடியாத காலம் சென்று
பதினெட்டு வயதிற்குள் இன்று
பத்துகாதலை பார்த்துவிட்டார்களே ..

பதினேழு வயதை தாண்டாத
காதல் என்றால் என்ன என்று கருத்து அறியா
பருவபாலகன் காதல் தோல்வியென
பத்து கவிதைகள் புனைந்து விடுகிறானே...

முத்தத்தில் முதல் காதலை முடித்து
காம சத்தத்தில் மறுகாதலை மடித்து
ஒத்துவரவில்லை என மூன்றாவது கடந்து
அடுத்த காதலுக்கு ஆயதம் ஆகினரே ...

தன் காதலைப் பேண சிதைக்கு
செல்ல துணிந்த காதல் எங்கோ சென்று
சதைக்கு ஏங்கி சலித்துப்போன
காதல் உண்மை காதல் தானோ ..

மொத்தத்தில் காதலை குற்றம் சுமத்தவில்லை
அத்திப்பூத்தார்ப் போல அங்கங்கே
நல்ல காதலும் நடந்தேறியே வருகிறது
காதலியுங்கள் உங்கள் காதலை காதலாக மட்டும்..