Pages

Thursday, March 31, 2011

சுமக்கும் தாயாய் நட்பு....


துன்பங்களை

நம்மோடு சரிபாதி

சுமக்கும் தாய்.....

நட்பு...


நான் விரும்பி நேசித்த நட்புக்காக.....


நான் விரும்பி நேசித்த நட்புக்காக
நான் விரும்பி செய்த செயல்களை - மறந்து
உதாசீனப்படுத்தும் போது
இமையோரம் வரும் கண்ணீர் துளிகள்
எனக்கு மிகவும் பிடிக்கும்

உதாசீனப்படுத்திய நட்பு - மறந்து
திரும்ப வந்து உறவாடும் போது
இதயத்தில் வரும் பூரிப்பும்
எனக்கு மிகவும் பிடிக்கும்

காரணம் உண்மையான அன்பு நட்பின் பக்கம்

என் நண்பனுக்காக ஒதுக்குவேன்

 

என் இதய துடிப்பின்
இடைவெளி நேரம் கூட
என் நண்பனுக்காக ஒதுக்குவேன்

அவன் அன்புக்காக


என்றும் என் துடிப்பாக நண்பர்கள்....

இலவசமாய் கொடுங்கள் நம் நாட்டை

இனி உலகில் எதிரியை அழிக்க

ஆயுதம் தேவை இல்லை

இலவசமாய் கொடுங்கள்

நம் நாட்டை

உன் பணம் உனக்கே தானம்

உன்பேரில் கடன் உனக்கு இலவசம்

உன் சம்மதத்தோடு

உன்னையே விற்கிறான்

உலக வங்கியிடம்

மகாத்மா இன்னொரு ஜென்மம்

எடுத்து வா

இலவசம் வாங்க அல்ல

இன்னொரு விடுதலை வாங்க

இந்திய ரசிகன்!

பந்துகளா!
எதிரணி வீரனா!
பறந்துவிடுங்கள் எல்லை தாண்டி!

வீரமா!
விளையாட்டா!
ஓடி பிழைத்திடு வீட்டுக்கு!


Saturday, March 12, 2011

கிராமத்து நண்பனுக்கு

 

கண்மூடி யோசிக்கிறேன்
காலங்களின் மாற்றத்தில்
நம் வாழ்க்கையும்
மாறித்தான் போய் இருக்கிறது

ஒய்யாரமாய் நாம் நடந்து போகும்
ஒற்றையடி பாதையில்
டிராபிக் போலீஸ் போல் நின்ற
அந்த பனை மரம்
கொஞ்சம் வாடி போய் இருக்கிறது
வா நாம் வந்து இருக்கிறோம் என்று சொல்வோம்
அது வசந்த புன்னகை
பூத்து விடும்

கண் ரத்தமாய்
மாறினாலும்
கரை ஏற மனது இல்லாமல்
ஆட்டம் போட்ட
அந்த கம்மாய் குளம் கொஞ்சம்
உடம்பை குறைத்து
இருக்கிறது
இங்கேயும் வந்து விட்டார்களா
பட்டணத்தார்கள்
விலை நிலத்தையும்
கூட விட்டு வைக்காதவர்கள்
இதை மட்டுமா விட்டு விடுவார்கள்
நண்பா....

பட்டணத்து வாழ்க்கையில்
பக்கத்து வீட்டு நபர்கள் கூட
யார் என்று தெரியாமல்
போர் அடித்து விட்டது

பார்த்து சிரிக்க கூட
பைசா கேட்பார்கள் போல

கிராமத்து வாழ்க்கையில்
சிட்டு குருவி போல்
பரந்த நாம்
இன்று மாட்டி கொண்டோம்
இயந்திரமான வாழ்க்கையில்

யாரை குறை சொல்ல ....

எப்போவது
நம் கிராமத்திற்கு வரும்
போது எல்லாம்
தாயின் மடியில்
படுத்து உறங்கின சுகம் ...

நம் நட்பின் சுவடுகளை
சுமந்து கொண்டு அலையும்
நம் கிராமம் என்றும்
அழியாது
நம் நினைவை விட்டு
நம் நட்பை போல்
நீங்காத உறவாய் இன்றும் என்றும்