Pages

Thursday, January 16, 2014

என் குழந்தை




குழந்தை
தெய்வத்தின் காட்சியாய்
அன்பின் சாட்சியாய் ,
அரவணைக்க ஆசையாய் ,
எத்தனை இன்பம் ,
எதை சொல்ல !

அவள் என் நிகழ் கால சொர்க்கம் ,
எதிர்கால நண்பன் ,
காலத்தின் கட்டளையில் ,
என்னுடைய ஊன்றுகோல் !

ஆயிரம் துன்பங்கள்
அனைத்தும்
உன் சில்லறை சிரிப்பில் ,
சிதறி உடைந்தது !

என் நெஞ்சின் அழுத்தத்தை
உன் பிஞ்சு கால் சூறையாடும் ,
உன் பக்கத்தில் இருக்கவே ஆசை
உன் பால் மனம் ருசிக்க ஆசை !

நீ
நான் கண்டெடுத்த புதையல் ,
தங்கம் வைரங்கள் கூட
உன் காலுக்கு கீழ்தான் ,
எத்தனை கோடி கொடுத்தாலும்
பெற்றிட முடியாத என் பொக்கிஷம் !

பயணம் இனிமையாகும் ,
உன் பிஞ்சு கைகள் டாட்டா சொல்லும்போது ,
நீ ஓடிவந்து என் தோல் சேர்கையில்
என் சுமைகள் எல்லாம் இறங்கி ஓடும் !

என் உறக்கத்தை கலைத்து ,
விடியளைக்காட்டும் உன் அழகு முகம் ,
நீ ஆசையாய் அடிக்கும் அடிகள் கூட
என் முகத்தில் ஒத்தடம் கொடுப்பதாய்!

எத்தனை பதவிகள் வந்தாலும்
எத்தனை பட்டங்கள் பெற்றாலும்
நீ ஆசையாய் கூப்பிடும்
"அப்பா " வார்த்தைக்கு இணையாகுமா !

எந்த விழா வந்தாலும் ,
அதை எல்லாம் தூரம் தள்ளும்
உன் பிறந்த நாள் சுகம் !

உன் அம்மா உன்னை 10 மாதம் சுமந்தால்
நானோ உன்னை காலமெல்லாம் சுமக்கிறேன் ,
உன் புத்தக சுமையோடு
ஏன் இதயத்தையும் சேர்த்தே எடுத்து சென்றாயோ !

கன்றுக்குட்டி
தாய் பசுக்காக காத்திருக்கும்
இங்கே தாய்ப்பசு
உனக்காக அல்லவா காத்துகிடக்கு !

தங்கத்தில் தரைபோட்டு
பளிங்கு கல்லால் படிக்கட்டி
ஊர் மெச்ச வீடு கட்டினேன் ,
நீ ஒருத்தி விளையாட அகம் மகிழ்ந்தேன் !

நீ எனக்கு பிள்ளை இல்லை ,
நான் தான் உனக்கு பிள்ளை ,
நீ ஆணையிட்ட அன்புகட்டளைகளை
அடியேன் அப்படியே செய்ய தயார் !


Thursday, December 22, 2011

அனைத்து அப்பாகளுக்கும் சமர்ப்பனம்

அனைத்து அப்பாகளுக்கும் சமர்ப்பனம் 

.......அனைத்து அப்பாகளுக்கும் சமர்ப்பனம்........

உழைப்பதற்க்கெனவே
உலகில்
உருவாக்கப்பட்ட
ஒரு உயிர்
அப்பா....

தொகுதிக்கு வரும் எம்.எல்.ஏ வை போலத்தான்
என் அப்பாவின் சிரிப்பு.
எப்போதாவதுதான்
உதடுகள் மேல் உலாவரும்..

அவர் நிம்மதியாய் உறங்கிய தருணங்களும்
நீண்ட நேரம் என்னொடு பேசிய தருணங்களும்
மிக மிக குறைவு.

இமய மலையை விட
இரண்டு மடங்கு சுமை
இதயத்திற்குள் இருந்தும்
என் சிறகுகளை
சீரமைப்பதைப் பற்றியே
சிந்தித்து கொண்டிருப்பார்.


அவர் பட்ட கஷ்டத்தை
பகிர்ந்து கொண்டதில்லை
என் பட்ட படிப்பு முடியும் வரை
பட்டினி போட்டதில்லை..

நான் சிறிது நேரம்
காணமல் போனால்
கண்ணிமைக்கும் நொடிக்குள்
என்னை கண்டுகொள்வார் .

ஒரு...
நிசப்தம்
நிறைந்த நடு நிசிப் பொழுதில்
காணமல் போனார்...
காலமானார்...

எனகிருந்த ஒரே ஒரு
மெலுகுவர்த்தி கரைந்துவிட்டது.
என் இருட்டை வெளுத்த
சூரியன் மறைந்துவிட்டது.

என்னை இழுத்துக்கொண்டு
காலம் வேகமாக ஓடிப்போனது..
எனக்கும் கல்யாணம் ஆனது..

கல்யாண கடனை அடைப்தற்க்கே
பாதி வருஷம் உருண்டோரிச்சு
அதற்குள் கையில் ஒரு குழந்தை
வந்து பிறந்திருச்சு.

என்னை கட்டின பாவத்திற்கு
மனைவிக்கு
மாத்த ஒரு புடவை எடுக்க
மாச சம்பளம் போதவில்ல.

மளிகை பொருளும்
மருந்து செலவும் போக
வாங்குன சம்பளம் மிச்சம்பிடிக்க
வழியுமில்ல.

வசதியா வாழ நினைச்சவனுக்கு
வயித்த கழுவவே
வழியில்லாம போயிருச்சு.

சம்பளம் வாங்குன மறுநாளே
மாச கடைசியாயிருச்சு.

நடுத்தர குடும்பத்தலைவனின்
நரக கசப்பை
நாக்கு ருசிக்க பழகிவிட்டது.

ஆசை மனைவியோட
கொஞ்சி பேசும்
கொஞ்ச நேரமும் விலகிவிட்டது.

என் துயரம் என்னோடு போகட்டும்
என் பிள்ளையாவது
இந்த உலகை ஆளட்டும்.

பத்து வட்டிக்கு கடன் வாங்கி
பள்ளியில என் மகன
சேர்த்த பிறகு
பாவி மனசுக்குள்
முளைத்தது சிறகு.

தட தட வென நாட்கள் நகர்ந்தது
தலை முடி மெல்ல நரைத்தது.

திடிரென ஒருநாள்
நெஞ்சு வலி வர
யாருக்கும் சொல்லாமல்
மருத்துவரை அணுகினேன்.

மாரடைப்பாக இருக்கலாம் என
மருத்துவர் அறிவித்தார்.

அடிகடி அப்பாக்களுக்கு வருகிற
அதே நோய்தான் எனக்கும்.

இருந்தும்
மருத்துவம் தொடர
ஆசையில்லை
மறைக்காமல் சொன்னால்
காசுயில்லை.

கவலையோடு வீட்டுக்கு வரும் வழியில்
கடன் காரன் கழுத்தை நெரிக்கிறான்.
என் நிலையை பார்த்த எல்லோரும்
கைதட்டி சிரிக்கிறான்.

குடும்பம் என்ற ஒன்று இல்லையென்றால்
விசம் குடித்து
என்றோ
என் விதியை முடித்திருப்பேன்.

கண்ணீரை துடைத்துகொண்டு
வீட்டுக்குள் நுழைகிறேன்.

உடைந்த நெஞ்சொடு
ஓய்வு நாற்காலியில்
உட்காருகிறபோது
என் மகன் கேட்கிறான்.

"அப்பா பள்ளியில் சுற்றுலா செல்கிறோம்
பணம் தாருங்கள்"
"இல்லை கண்ணா
அடுத்த முறை போகலாம்" என
அன்பாய் நான் சொல்ல..

மறுபடியும் என் மகன் சொல்கிறான்
"அப்பா உன்னால ஒரு லாபம் ஏது
நீதான் என் வாழ்வின் சாபக்கேடு"


நெஞ்சு வெடித்து
துடிதுடித்து போகிறேன்.
நேர்ந்ததை சொல்ல முடியாமல்
எனக்குள் சாகிறேன்.

என் நினைவுகள் பின் நோக்கி செல்கிறது...

இதே போல்
என் அப்பாவிடம்
நான் நடந்து கொண்டதாய் ஞாபகம்.

இப்படிதானே
என் அப்பா
இலவம் பஞ்சை வெடித்திருப்பார்.
இதயம் நொந்து துடித்திருப்பார்.

ஒரு மகனை பெற்ற எனக்கே
சமாளிப்பது சாகிற வலியை தருகிறதே!

மூன்று பெண்களை கட்டி கொடுத்த
என் அப்பாவுக்கு
எத்தனை சங்கடம் இருந்திருக்கும் ?

என் அப்பாவை போல்
இந்த உலகில் ஒரு ஆள் இல்லை.
இன்று
கண்ணீரால் பாதம் கழுவ
அவர் கால் இல்லை.

அப்பா.....
அப்பா....
அப்பா...

உடைந்த நெஞ்சில்
வடிந்து ஓடும்
கண்ணீரோடு
உங்கள் பாதம் தொட்டு கேட்கிறேன்.
தயவு கூர்ந்து என்னை மன்னியுங்கள்.
உங்களுக்கே
ஆயிரமாயிரம் புண்ணியங்கள்......

----தமிழ்தாசன்----


Tuesday, November 22, 2011

முதியோர் இல்லம்


முவ்வேலை உணவு ஒன்றானது

அழுகை யதார்த்தமானது உனக்கு

அவன் வருகையை எதிர்பார்த்து

கண்கள் துவண்டு போனதே மிச்சம்

உன் கண்களில் கண்ணிற்

கடலை கண்டேன்

அம்மா என்னும் உறவை துறந்து

வழியனுப்பி வைத்த அன்பு

மகனை எண்ணி.....!!!!!!!!!

ஈழ தமிழச்சி ................!

பெண்ணின் அங்கத்தை
பேன்பார்த்த ராணுவம்
கர்ப்பை காமத்தால் ரசித்த
கயவர்களை கண்டு
சீறுகிறாள் நம் செந்தமிழ் தாய்

முடியும் விடியலாய்
மின்னும் வானம்
என் பக்கத்து தமிழன்
ஈழத்தில் ஒளிரும் போது

என்றோ அரை கூவிய
புள்முளைக்காக சீனாவை போல்
பேர் பெற்ற நாடாய் மாறும்

அன்று
என்னை தீட்டிய ராணுவமே
என் தமிழை தீட்டி
தங்க பதக்கம் தரும் நாள்
என்னாள் என்றோவென

காத்திருக்கிறோம்
கண்ணீர் சொட்ட
கரையை தேடும்
ஈழ தமிழச்சியாய் ................!

நட்பா? காதலா?

நட்பா? காதலா?

நட்பு பெரிதா ? காதல் பெரிதா ?
               நண்பன் கேட்டான்

நான் முதலில் கற்றுக் கொண்டது
               நட்பு தான்

நான் இது வரையில் காத்து வருவது
               நட்பு தான்

என்னை நானாக பார்த்தது
               நட்பு தான்

காதலின் இனிமையான பாகம்
               நட்பு தான்

எனினும்
எனக்கு என்னை அறிமுகப்படுத்தியது
காதல் தான்
எனவே,
               நட்பின் காதலும்,
               காதலின் நட்பும்
.
                                                          

Monday, September 12, 2011

மௌனம்

நண்பனே!!!
உன் அருகில் அமர்ந்து ஆயிரம்
வார்த்தைகள் பேச நினைத்தேன்-ஆனால்
என் அருகில் நீ இல்லை
என்னை சுற்றி எல்லாரும் இருக்க
என் மனம் உன்னை சுற்றி திரிந்தது

உன்னுடன் பேச முடியாமல்
கண்ணீர் துளிகள்
ஆறாய் ஓட ,
கண்கள் உன்னை தேட
உன் நினைவுகளுடன் நாட்கள் கழிந்தன.

ஒரு நாள் நீ என்னை தேடி வந்தாய்
உன்னை கண்டதும் பேசும் என் வாய்
பேசமுடியாமல் மௌனம் கொள்ள
உன் அருகில் அமர்ந்த நான் என்
உள்ளத்தின் அசைகளை சொல்லமுடியாமல்
மௌனத்தின் மூலம் வெளிபடுதினேன்


உன் தொலைவில் இருந்து தொலைபேசில்
பேசும் ஆயிரம் வார்த்தைகளை விட
உன் அருகில் அமர்ந்து மௌனமாக
பேசும் வார்த்தை பெரியது

எப்போதும் பேசிக்கொண்டு இருப்பதை
விட பேசாமல் சிலமணி நேரம்
மௌனம் கொள்ளும் மனதில் தான்
சாதனைகள் வளர முடியும்

இந்த உலகில் வீன் பேச்சி
பேசினால் தான் குற்றம்- ஆனால்
மௌனம் என்ற பேசினால் உலகை
வெற்றி கொள்ள முடியும்

என்றும் மௌனமாய் உன்னுடன்
வாழ ஆசை படுகிறேன்
என் அன்பு நண்பன் உன்னுடன்

என் மௌனம் இந்த கவிதையில்
வடிவம் பெற்றுள்ளது
என் நண்பனுக்காக!!!

Sunday, September 4, 2011

நினைவில் நின்றவை

நாம் நினைத்தது நம் வாழ்வில் நடந்து விட்டால்.,நடந்தவைக்கான நினைவுகள் இல்லாமல்போகலாம் .., 


நாம் நினைக்காதவை வாழ்வில் நடந்துவிட்டால்.,
நடப்பவை அனைத்தும் நம் நினைவுகளாகி போகலாம்., 

   - கவி பித்தன் சதீஷ்