Pages

Thursday, December 30, 2010

நீ தான் என் உயிர் ..

கனவோடு சுமந்தாய்
கருவறையில் பத்து மாதம்,

உலகத்திற்கு என்னை
அறிமுகம் செய்தாய் உன் பிள்ளையாய்,

உன்னை உருக்கி
என்னை ஊட்டி வளத்தாய்,

கலங்கிய பொழுதெல்லாம்
கண் துடைத்தாய்,

கருப்பு மை இட்டு
அழகு பார்த்தாய்,

செல்ல பெயரால்
சொல்லி அழைத்தாய்,

எனக்கு ஒன்று நிகழும் போது
விழித்துக் கொள்கிறாய்.

நீ தான் என் உயிர் தாய்.


எழுதியவர் :இள.இளங்கண்ணன்

Tuesday, December 28, 2010

என்ன செய்ய முடியும்….?

என்ன செய்ய முடியும்….?
வலிக்க வேண்டும்
என்றே என் கண்ணாடி
இதயத்தில் கல் எறிபவர்களை….

என்ன செய்ய முடியும்…. ! 

எழுதியவர் : சதீஷ் 

Monday, December 27, 2010

என்றும் அன்புடன் உன்னை தேடி !!!

தோழி என்றாவது உன் விழிகள் என்னை
தேடினால் உன் கண்களுக்குள் என்னை
தேடிபார் அதில் ஒரு துளி கண்ணீராய்
இருப்பேன் என்றும் அன்புடன் உன்னை தேடி !!!

எழுதியவர் :யாசின்

Sunday, December 26, 2010

அம்மாவை பற்றி கவிதையா நிச்சயமாக முடியாது...

நீயே ஒரு கவிதை - அம்மா
அம்மாவை பற்றி கவிதையா
நிச்சயமாக முடியாது என்னால்
காதலியை பற்றி எழுத
ஒரு காகிதமும்
சில பொய்களும் போதும்...!
அம்மா உன்னை பற்றி
எழுத உலகத்தில் உள்ள
அனைத்து காகிதங்களும் பத்தாது
என்னை பொறுத்தவரை
கடவுளை நான் நம்ப காரணமே!
எதை எதையோ படைத்த அவன்
அம்மாவையும் படைததர்க்காகதான்..!

எழுதியவர் :மு.இளந்தமிழன்

Saturday, December 25, 2010

நம்பிக்கை

அன்னையே ! நீ
என் முதுகில் ஏற்றிய
புத்தக பையை சுகமாய்
சுமந்தேன் எதிர்காலத்தில்
உன்னையும் சுமபேன் என்ற நம்பிக்கையோடு

எழுதியவர் :யாசின்

கண்ணில் கண்ணீர் இல்லை

உனக்காக
கண்ணிர் சிந்துவதிலும்
ஒரு சுகம்
இருந்தது இப்போது
அதுவும் இல்லை
காரணம் என்
கண்ணில் கண்ணீர் இல்லை............!!!!!!!!!!!

எழுதியவர் :ரெங்கா

Thursday, December 23, 2010

இழக்கமுடியாது....மறக்கமுடியாது...

உள்ளத்தில்
உருவான
பாச உணர்வுகள்
அனைத்தும்
ஒருபோதும் இழக்கமுடியாது!

உள்ளத்தை
உடைத்த
பழி உணர்வுகள்
அனைத்தும்
ஒருபோதும் மறக்கமுடியாது!

எழுதியவர் :வேதகிரி

Wednesday, December 22, 2010

நட்பை மட்டும் இடம் மாற்றிக் கொண்டோம்

என்னிடத்தில்
எதையும் நீ கேட்கவில்லை...
உனக்கென்று
எதுவும் நான் கொடுக்கவும் இல்லை...
ஆனால்
நட்பை மட்டும்
நம் இதயங்களில்
இடம் மாற்றிக் கொண்டோம்........!!!!!

எழுதியவர் :ரெங்கா

 

Tuesday, December 21, 2010

தாயின் மடிக்கு சுகமான படுக்கை...

 எத்தனையோ

பஞ்சனை மெத்தைகள் மட்டுமல்ல.

காதலியின் நெஞ்சனை தாங்கினால் கூட

தாயின் மடிக்கு சுகமான படுக்கை

வேறொன்றும்

உலகில் இல்லை என்பதை மட்டும்தான்

உள்ளம் உணர்த்துகிறது....

எழுதியவர் :மணிகண்டன் மகாலிங்கம்

Monday, December 20, 2010

நான் நேசிக்கும் ஒரு தெய்வம், என் அம்மா

நான் நேசிக்கும் பூஜிக்கும்
ஒரு தெய்வம், என் அம்மா
நான் சிரிக்கையில் சிரித்தாய்
நான் அழுகையில் எனக்காக கண்ணீர் வடித்தாய்
நான் வாழ துடிக்கும் உன் இதயம்
என்றும் எனை தாங்கும் உன் ஆசை மடியும்
நான் உண்ட மீதி நீ உண்பாய்
எனை உறங்க வைக்க கண் விழித்திருப்பாய்
உன் விருப்பம் நான் அறிந்ததில்லை
என் ஆசை நீ மறந்ததில்லை
கேட்டதை எல்லாம் கொடுத்தாய்
கேட்கும் போதே கொடுத்தாய்
கல்லுக்குள் கடவுளை தேட மனமில்லை
உனைஅன்றி எனக்கு வேறு துணையில்லை
நாட் கணக்கில் விரதமென்று பட்டினி கிடப்பாய்
ஒரு பொழுது நான் சாப்பிட மறுத்தால், உன் உயிர் நோக துடிப்பாய்
வன் சொல்லலால் சுட்டதுண்டு உன்னை
எதையும் கேளாமல் மன்னிப்பாய் என்னை
இது ஒப்பந்தந்தில் சேர்ந்த சொந்தமன்று
ரத்தத்தில் தோன்றிய பந்தமென்று..
நான் நேசிக்கும் பூஜிக்கும்
ஒரு தெய்வம் என் அம்மா………….. 

எழுதியவர் : விக்னேஷ் 

 

குழந்தையின் முத்தத்திற்காக தாய்,,,,,

கணக்கில்லா

முத்தங்கள் வாங்கினாலும்

கொடுத்த முத்தத்தின்

ஈரம் காய்வதற்குள்

அடுத்த முத்தத்திற்காக

வரம்வேண்டி காத்திருக்கும்

குழந்தையின் முத்தத்திற்காக தாய்,,,,,

எழுதியவர் :மணிகண்டன் மகாலிங்கம்

Sunday, December 19, 2010

பிரிந்து போனாலும்

ஒரு
உயிரை நீ நேசிப்பது
உண்மையென்றால்..
அந்த
உயிர் பிரிந்து போனாலும்
மீண்டும்..
உன்னைத் தேடிவரும்....

எழுதியவர் : கவிதா 

 

Saturday, December 18, 2010

கலங்காதே

கஷ்டங்களைக் கண்டு
கலங்காதே!
கோடைகாலம்
குளிர்காலம்
எந்தக் காலமுமே
நிரந்தரமல்ல...
மனிதனின்
வாழ்வில் வரும்
கஷ்ட காலமும் தான்....!!!!!!!!!!

எழுதியவர் :ரெங்கா

Friday, December 17, 2010

மலர்வது நம் நட்பாக இருக்கட்டும்

"உலகம் மாறலாம்
உண்மை மாறாது
பந்தம் மாறலாம்
பாசம் மாறாது
நாம் மாறலாம்
நாம் நட்பு என்றும் மாறாது!"
"உதிர்வது மலர்களாக இருக்கட்டும்
மலர்வது நம் நட்பாக இருக்கட்டும்!"

எழுதியவர் :ராம்ஜி

Thursday, December 16, 2010

கவிஞனின் கண்ணீர் !!!

சோகத்தின் வெளிப்பாடு
கண்ணீர் என்பது நாமறிவோம்
ஏன் அதிகபட்ச சந்தோசத்தின்
வெளிப்பாடு கூட கண்ணீர்தான்!
கவிஞனின் அத்தனை உணர்வுகளிலும்
தீரப்போவது கண்ணீர் மட்டுமல்ல,
சில வெள்ளை காகிதங்களும்
சற்றே மையும்தான்..
மனதின் பாரம் குறையும்போது
தாள்கள் நிறைந்திருக்கும்
கவிதைகளால்...
(கிறுக்கல்களால்)...

Wednesday, December 15, 2010

நண்பர்கள்

நண்பர்கள்
நம்பிக்கை வைத்து பழகினால்
கண்ணில் கண்மணியாய்
பகிர்ந்துகொள்ள பாசம் தந்து
தோள்கொடுக்கும் வேர்கள்
கள்ளம் இல்லை எங்கள் நட்பில்
என்றும்
என் மனவானில் மின்னும் நட்சத்திரங்கள்
என் நண்பர்கள்
என் நம்பிக்கை நட்சத்திரங்கள்..... 

எழுதியவர் : விக்ரம் 

 

Tuesday, December 14, 2010

என் நட்புக்கு விட்டு கொடு

உன்னை பின்
தொடரும் உரிமை
என்னை தவிர
வேற யாருக்கும்
கிடையாது

சொல்லி வை
உன் நிழலிடம்.
என்
நட்புக்கு
விட்டு கொடு என்று.

எழுதியவர் : கவிதா 

 

உன் நட்பை அறிந்த பிறகு. ..

நினைப்பதை
விட
மறப்பது கடினமானது
என்று புரிந்து
கொண்டேன்.
உன் நட்பை
அறிந்த பிறகு.

எழுதியவர் : கவிதா 

Monday, December 13, 2010

கண்ணீருக்கு விலை இல்லை.

நேசிப்பது
எல்லாம் கிடைத்து
விட்டால்.
கண்ணீர்
துளிகளுக்கு
மதிப்பில்லை.
கிடைப்பதை எல்லாம்
நேசித்து விட்டால்
கண்ணீருக்கு
விலை இல்லை.

எழுதியவர் : கவிதா 

 

தோல்வியைக்கண்டு கலங்க வேண்டாம்

தோல்வியைக்கண்டு கலங்கும்
குணம் வேண்டாம்
வெற்றியை மதிப்பிடும்
சுய அறிவு வேண்டும்

வாழ்க்கை என்னும்
கடலைக் கடக்க
கருணை வேண்டாம்
தன்னம்பிக்கை என்னும்
துடுப்பிருந்தால் போதும்.

எழுதியவர் : சதீஷ்

 

Sunday, December 12, 2010

என் உயிர் நண்பன்!

ஆறுதல் சொல்ல ஆள் இருந்தால்
அழுவதில் கூட சுகம்தான்!
சாய்ந்து கொள்ள நண்பன் இருந்தால்
சாவதில் கூட இனிமைதான்!-நண்பா
உன்னை அழவும் விட மாட்டேன்!
விழவும் விட மாட்டேன்!-
அணைத்துக்கொள்,ஆயுள் வரை இருப்பேன்
உன் உயிர் நண்பனாய்! 

எழுதியவர் : கீதுவினோ 

Saturday, December 11, 2010

சொன்னால் அது கவிதை......

உலக நிகழ்வுகளை

பல வார்த்தைகளால்

சொன்னால் அது காவியம்.....

உலக நிகழ்வுகளை

ஓரிரு வார்த்தைகளுக்குள்

சொன்னால் அது கவிதை...... 

எழுதியவர் :மணிகண்டன் மகாலிங்கம்

Friday, December 10, 2010

தாய்,குழந்தை வித்தியாசம் தெரியவில்லை...

குழந்தையோடு

தாய் கொஞ்சி பேசுகையில்

வித்தியாசம் தெரியவில்லை...

யார் குழந்தையென்று..... 

எழுதியவர் :மணிகண்டன் மகாலிங்கம்

Thursday, December 9, 2010

தாய்.....

உயிரை வருத்தி
உயிர் தந்தவள்
உதிரம் பருக்கி
உருவம் தந்தவள்
உடல் வருத்தி
உணவு கொடுத்தவள்-தன்
உறக்கம் மறந்து
உறங்க செய்தவள்-நாம்
உலகம் அறிய
உயிரையும் தருபவள்
தாய்...

எழுதியவர் :கஜேந்திரன்

தாயின் குழந்தை உள்ளம்...

குழந்தையின்

கையில் இருந்த பொம்மை

கை தவறி கீழே விழுந்து

அம்மா என கூக்குரல் எழுப்புவதற்குள்

ஐயோ!என அம்மா அலறினாளாம்.

உயிரற்ற பொம்மை

உடைந்திருக்குமோ என்று அல்ல....

உயிரற்ற பொம்மைக்கும்

வலித்திருக்குமோ என்று...... 

எழுதியவர் :மணிகண்டன் மகாலிங்கம்

 

முகம் பாராமல் நட்பொன்று வளரலாம்

முகம் பாராமல்
நட்பொன்று வளரலாம்
என்பதே தொலைபேசியில்
நீ அறிமுகமானபோதுதான்
தெரிய வந்தது.
உன் குரல் வசீகரமும்
சரளமான பேச்சும்......

எழுதியவர் :ரெங்கா

 

Wednesday, December 8, 2010

திருப்பி முளைக்காத மரம் நம் நட்பு

உன்னைக் கண் கொண்டு
பார்க்கவில்லை உயிர் கொண்டு
பார்க்கின்றேன்....
மரத்தில் பறிக்க பறிக்க மலரும் மலரல்ல
உன் மேலான என் நட்பு
பறித்தால் திருப்பி முளைக்காத
மரம் என் நட்பு.......
நான் உன்னை நேசிக்கின்றேன்
உன் நட்பை சுவாசிக்கின்றேன்.............!!!!!!!! 

எழுதியவர் :ரெங்கா

 

தாயீன் கண்ணீர்

கண்ணீர் துளிகளின் வலியும்
தாயீன் அன்பும் ,பிரிவு
அணைக்கும்போது தான் புரியும்
அவள் கண்ணீர் வார்த்தைகளில்
மாயமாகி விட ,குழந்தையின்
சிரிப்பின் முகத்தில் சுகம் கண்டாள்

எழுதியவர் : லக்ஷ்மி 

 

ஒரு குழந்தையின் இதயத்தில்

ஒரு குழந்தையின்
இதயத்தில்
இடம் பெறுவதைக்
காட்டிலும்
உயர்ந்த சிம்மாசனம்
உலகினில் இல்லை! 

எழுதியவர் :சுதந்திரா

அன்பு.....!!!!

மரணம் கூட மடிந்து போகலாம் ...!
மனதுக்கு பிடித்தவர்
நம்மை புரிந்து கொண்டால்...!!!!

எழுதியவர்: மூர்த்திராஜு


 

Tuesday, December 7, 2010

கவிஞனின் கேள்விகள்

எங்கள் மரணத்திற்கு பின்னால்
உங்கள் மரண சான்றிதழிலாவது
மாற்றி திருத்தி கொள்ளுங்கள்
மானமுள்ள தமிழனென்று
ஈழத்து கவிஞன் எனக்காக
எழுதிய இறுதி கவிதையிது 

எழுதியவர் :  கவி

 

Monday, December 6, 2010

திருட முடியாத பரிசு

பிரிவு
எனபது யாராலும்
மறுக்க முடியாத
வலி.....
நினைவு
எனபது யாராலும்
திருட முடியாத
பரிசு"

எழுதியவர் : கவிசுதா

 

Sunday, December 5, 2010

முதியோர் இல்லம்

மனிதர்கள் சென்று மிருகங்களை
பார்க்கும் இடம்
"மிருககாட்சி சாலை"
மிருகங்கள் சென்று மனிதர்களை
பார்க்கும் இடம் 
"முதியோர் இல்லம்" 

 

எழுதியவர் :  சங்கீதபிரியன்


நாளை நீ என்னால் சாம்பல்

எரிந்து போன சிகரட் சாம்பல் சொன்னது இன்று உன்னால் நான் சாம்பல் நாளை நீ என்னால் சாம்பல்....

தாயின் கருவறை........


மதம்,இனம்,மொழி,

பொறாமை,பொய்,களவு,

என்ற பாகுபாடுகள்

இல்லாத ஒரேஒரு உலகம்.....

தாயின் கருவறை........

Tuesday, November 30, 2010

நண்பர்களையே நினைத்து வாழ்வோம்.....

 

பிறந்த இடம் ஒன்று,,,,

வளர்ந்த இடம் ஒன்று....

நண்பர்களாக இணைந்த இடம் ஒன்று.....

இருக்கும் வரை

நண்பர்களுடன் இணைந்து வாழ்வோம்...

இறக்கும் வரை

நண்பர்களையே நினைத்து வாழ்வோம்.....

Monday, November 29, 2010

நண்பேண்டா

நிழல் கூட மாலை நேரத்தில் பிரியும்
என் நினைவுகள் உன்னை விட்டு என்றும் பிரியாது!

மரணமே வந்தாலும் உன்னை மறக்காத இதயம் வேண்டும்!
மீண்டும் ஜனனம் என்றால் அதில் நீயே வேண்டும்
உரவாக அல்ல என் உயிர் நட்பாக!

புரியாத நட்புக்கு அருகில் இருந்தாலும் பயனில்லை
புரிந்த நட்புக்கு பிரிவு ஒரு தூரமில்லை!

நம் வெற்றியின் போது கை தட்டும் பல விரல்களை விட
தோள்வியின் போது கை கொடுக்கும் நண்பனின் ஒரு விரலே சிறந்தது....!!!

Sunday, November 28, 2010

நண்பா உன்னை விடவா காதல் உயர்ந்தது

கல்லறையில் மாலையிட்டு

கடைசி சொட்டு கண்ணீரில்

கலங்குகிறாயே செல்ல நண்பனே !

காதலுக்காக உயிர்விட்டேன் என்று

Friday, November 26, 2010

பிரிவினால் புரிந்துகொள்...!!

புதிரான வாழ்வில்
நம்மைப் புரிந்து கொண்ட
ஒரு சொந்தம் "நட்பு"...!!

இந்த நட்பைப் புரிந்து கொள்ள
ஒரு நல்ல சந்தர்ப்பம்
"பிரிவு"...!!

உன்னை விட்டுப் பிரிகிறேன்
புரிந்து கொள்ள...!!

 

 

Monday, November 22, 2010

பாவம் பிரிவு

 

நம் நட்பின்
மீது
பொறமைகொண்டது
பிரிவு !!
அதனால் தான்
பிரிக்க துடிக்கிறது
நம்மை-பாவம்!
அதற்கு
எப்படி தெரியும்
நம்மை பிரித்தாலும்
என்றும் பிரியாத
நினைவுகள்
நம்மிடம் இருக்கிறது
என்று !!!!!!!!!!!

Sunday, November 21, 2010

வாசமில்லாத பன்னீர்த்துளிகள்...


வாசமில்லாத பன்னீர்த்துளிகள்...

இதயத்தில் வலிக்கச்செய்தது...  

கண்ணில் வடியும்

கண்ணீர்த்துளிகள்.....


Saturday, November 20, 2010

கற்சிலைகள் நமக்கெதற்கு.....



அன்பை மட்டுமே

அன்பளிப்பாக கொடுக்கும்

அன்னையிருக்க

ஆயுதம் ஏந்திய

கற்சிலைகள் நமக்கெதற்கு.....

இதயத்தினுள் வலியோ ஆயிரமாயிரம்..



நான் இதுவரை

எழுதிய கவிதைகள்

ஆயிரமாக இருக்கலாம்..

என் இதயத்தினுள் இன்னமும்

உன் நினைவுகள்

கொடுக்கும் வலியோ ஆயிரமாயிரம்..

Monday, November 15, 2010

தாயின் கருவறை......



தமிழ்மொழிக்கு

ஈடான மொழிதான்

இவ்வுலகில் உண்டோ?

தாயின் கருவறைக்கு

ஈடான சுகமான வலிதான்

காதலை சுமக்கும்

இதயத்திற்கு உண்டோ?

Sunday, November 7, 2010

வாழ்க்கை



வாழ்க்கை ஒன்னும் mp3 அல்ல... நமக்கு பிடிச்ச பாட்ட போட்டு கேட்பதற்கு ... அது ரேடியோ மாதிரி வர்ற பாட்ட நாமதான் ரசிக்க பழகணும்..

நான் வணங்கும் தேவதையே



சுமந்துபெற்ற
காரணத்தினால் தானோ
எப்போதும் நீ
என்னைச்
சுமப்பதிலேயே
சுகத்தைக் காண்கிறாய்...!

அழகு


அழகு படைத்த
பெண்ணுக்குமுன்னால்
அறிவுள்ள ஆணும்
பித்தனே!

Thursday, November 4, 2010

உயிர் நட்பு(பூ)



அனைவரும்
தன் மனதிற்கு பிடித்தவரை
"உன்னை
என் இதயத்தில் வைத்திருக்கிறேன்."
என்றுதான் சொல்வார்கள்.
என்னை பொறுத்தவரை
"நீங்கள்
என் இதயத்தில் இல்லை!
என் ஆன்மாவில் இருக்கிறீர்கள்!
என் இதயம் இறந்தபின்னும்
என் ஆன்மா இறப்பதில்லை!
எத்தனை பிறவி
பிறந்தாலும் பிறக்காவிட்டாலும்
என் ஆன்மாவோடு கலந்திருப்பிர்கள்!
அதுதான் நம் உயிர் நட்பு(பூ)."!!!

கண்களுக்கும் கண்ணீருக்கும்..............


கண்களுக்கும்

கண்ணீருக்கும்

உள்ள இடைவெளி

இவ்வளவுதான்..

கண்களால்

உருவங்களை

பார்க்க

மட்டுமே முடியும்.....

கண்ணீரால்

மட்டும்தான்

உள்ளத்தின் வலிகளை

உணர முடியும்......

Wednesday, November 3, 2010

சுமக்கும் தாய்மடி...





குப்பைத்தொட்டி....

அனாதையாக வீசெறியப்படும்

குழந்தைகளை

சுமக்கும் தாய்மடி...