Pages

Sunday, February 13, 2011

காதலர்தினம் வரை

காந்தமும் காதலும் ஒன்றடி
கண்களில் பார்வையை மாற்றடி

துருவங்கள் ஒன்றானால் துன்பமே
துடிக்கும் இதயம் ஒட்டிகொண்டால் இன்பமே

காந்தமாய் காதலர் தினம் என்னை இழுக்க
கட்டழகு இரும்பு இதயம் திறந்து வாடி

ஈரம் பட்டால் இரும்பு கூட துருவாகும்
இதயம் சுட்டால் துருகூட தூளாகும்

காந்தம் பட்டால் இரும்பு கூட காந்தமாகும்
காதல் பட்டால் இதயம் கூட காதலாகும்

மின்சார காந்தம் கூட இருட்டில் கிடக்குது
உன்னை சேரா காதல் கூட அப்படி இருக்குது

இருட்டை போக்க இரும்பில் இருந்து பொறி பறக்குது
இதனை பார்த்த காந்தம் கூட இரும்பை கட்டி கிடக்குது

எந்தன் கண்ணும் இருட்டில் தானே கனவில் இருக்குது
இதனை போக்கும் உந்தன் கண்கள் ஒளியில் மறைக்குது

காந்தம் இதயம் கலந்து ஒரு காதல் சேருமா
காத்திருக்கும் காலம் கண்ணில் ஈரம் சேர்க்குமா

இரும்பில் விழுந்த இரண்டு துளிகள் துரு பிடிக்குமா
இதயம் இரும்பாய் இருந்து இதனை படிக்குமா

காந்தம் போல காதல் வந்து கைபிடிக்குமா
கடைசிவரை இரும்பு இதயம் கண்திறக்குமா?


இனையதளதில் வந்து சேர்ந்த உன் தகவல்

மிதந்து வந்த
பறவையின் இறகு,
இனையதளதில் வந்து
சேர்ந்த உன்
தகவல் இரண்டுமே
அழகுதான்
இக்கணத்தில்
உன்னை விட!


Thursday, February 10, 2011

வர்ணிக்க வார்த்தை இல்லை..!!

கருவறை இல்லாத தாய்..!
கண்டிப்பில்லா தந்தை..!
தோல் சாயும் ஆசான்..!
கண்ணெதிரே கடவுள்..!
இப்படி...

தாய், தந்தை, ஆசான், கடவுள்,
ஒன்று சேர...?

நட்பாய்...!

தமிழில் அத்துணை சிறந்த வார்த்தைகள்
இருந்தும்,
இன்னும் சிறந்த வார்த்தையை
தேடுகிறேன்...

நட்பை வர்ணிக்க...!!!!!


Sunday, February 6, 2011

அனாதைகள் கடவுளின் குழந்தைகளாம்....

தேனெடுக்கும் நோக்கத்தில் மட்டுமே....
பூவை தேடும் வண்டு....
இளமை வேகத்தில்...
இரு நிமிட இன்பத்திற்கு சேரும்...
இரு ஜீவன்கள்....
இதனால் உருவானது..
மழலை...
இவர்களுக்கு அது பிடித்திருந்தால்.....
வைப்பார்கள் பெயர்...
இல்லையேல்...
இந்த உலகம் வைக்கும்...
அனாதை என்று....
ஓர் அணு உயிராகி... உருமாரி ...உலகில்...
உலவுகிறது ஆதரவற்று...
தவறு செய்தவன் மனிதன்....
பலியோ...
ஆண்டவன் மேல்....

அனாதைகள் கடவுளின் குழந்தைகளாம்....


உன் அழகை ரசிப்பதற்கு.....

 

உன் அழகை ரசிப்பதற்கு மின்மினியே
காத்திருக்கும் கண்கள் பல விழித்திருந்து
மிகையில்லை எழுதுகிறேன் நினைவிற்கு
மின்மினியே உன்னழகு இரவிற்கு
மீண்டும் நீ வந்திடுவாய் மனதிற்கு.........

Thursday, February 3, 2011

உன்னை போலவே...

உன்னை போலவே அழகு..
உன்னை போலவே சிரிப்பு..
உன்னை போலவே கவிதை நடை..
ஆனால்
என்னை போலவே எப்போதும்
அழுது கொண்டு இருக்கிறது
உன் குழந்தை..


உன் பிரிவால்

அன்பால் சிறை வைத்தேன் உன்னை
நீயோ தனிமையில் என்னை
சிறை வைத்து தப்பிச் சென்றுவிட்டாய்!

கனவில் கூட நான் கண்டதில்லையே
உன்னைப் பிரிந்து வாழ்பேன் என்று
இன்று நிஜமே பிரிவானதோ!

இதயத்தில் வலி உன் பிரிவால்
என் கண்களில் நதி அந்த வலியால்
சொல்லிப் போ எனக்கு ஓரு வழி...........!!!


Tuesday, February 1, 2011

என் அப்பா

அப்பா
உள்ளத்தில் உண்மையின் அழகன்
நிம்மதி தொலைத்து,
தினம் தோறும் உழைக்கும் தலைவன்
பேர் சொல்ல மட்டும் பிள்ளைகளின் கைத்தடி
மனைவி பிள்ளைகளின் நிம்மதியியே தன் வாழ்வென நினைக்கும் தூயவன்
கனவு கண்டிடுவார் நினைவெல்லாம் குடும்பத்திற்காகவே
என்ன ஒரு கலக்கம்
கண்டவர்கள் மேல் என்ன நடுக்கம்
அடுத்தவர் பார்வை தன் செல்வங்கள்மேல் படாது என்ன ஒரு காவல்
என்ன செய்தோம் அந்த காவலனுக்கு நாம் கடைசிவரைக்கும்
பாசத்தை விட அவர் நம்மில் கண்டதுதான் என்ன
கடைசிவரை கையேந்த விட்டதும் இல்லை எம்மை கண்கலங்கிப்பார்த்ததும் இல்லை
என் அப்பா நான் செய்ததெல்லாம் தப்பப்பா உங்களை நான் -
தாங்காது விட்டது ஏன் அப்பா?


மௌனமாய் நிற்கின்றேன்!

நேசத்தை விழிகளில் தேக்கி
ஆசையுடன் நீ பேசும் போது
துடிக்கும் உன் இமைகள்
சொல்லி விட்ட காதலைக் கண்டு
நானும் மௌனமாய் நிற்கின்றேன்.........!!!