Monday, August 29, 2011
என் வாழ்வை அர்பனிப்பேன்
வழியும் என் கண்ணீரே
என் வழித்துணையாக வருவாயோ.
பிறழும் என் இதயத்தில்
வலிகள் களைந்திட வருவாயோ.
ஈரைந்த மாதமவள் கருவில்
தவத்தில் மகிழ்ந்தோமே.
அந்த இருள் தாண்டி ஒளியில்
விழுந்தும் - பிழையால்
வாழ்வை தொலைத்தோமே?
நான் மீண்டும் சேர்வேனா?
என் தாய் மடியில்.
என் வாழ்வை அர்பனிப்பேன்
ஒரு நொடியில்.!
- கவி பித்தன் சதீஷ்
Monday, August 8, 2011
காதல் தோல்வி போல் நட்பில் தோல்வி இல்லை
காதலில் அவளை உயிராய் நினைத்து
தேவதையாய் பாவித்து
கவிதை பல வடித்து நீதான் உலகம்
என்ற போதும் ஏற்க மறுக்கும் மனம்
சில நேரங்களில் உண்மைகாதலும்
தோல்வியில் முடியும்
நட்பில் அதுபோல் எதுவும் இல்லை
எதிர்பார்ப்பு இல்லை ஒரு புன்னகை போதும்
என்றும் நட்புடன் உண்மையாய் இருந்தால்
வாழும் நட்பு எந்நாளும்
நட்பில் தோல்வியே இல்லை
நட்பு நம்மை தோர்க்க விடுவதில்லை
எழுதியவர் :ருத்ரன்
Sunday, August 7, 2011
நிழலும் நானும்!
என்னோடு உலகம் வந்த நான் என் நிழல்!
என்னையும் பெரிதாய் காண்பித்தவன் நீ
இருந்தும் என் காலடியில்தான் நீ!
என்னை அறிந்தும் நீ என்னோடு
அது ஒன்றேபோதும் உன் பெருமையைச் சொல்ல!
என்னை பெரிதாக்க படு பள்ளத்திலும் வீழ்வாய்!
உன்னை பெருமை படுத்த நான் எங்கு விழுவேன்!
நிழலாய் உள்ள நிஜங்களின் காலடியில்!
அம்மாவுக்காக ஒரு கவிதை
அம்மா என்று அழைத்ததையும்
கவிதையாய் நீ உணர்ந்தாய்
என்னை முதலில் கவி என்று
சொல்லி நீ மகிழ்ந்தாய்
உன் பெருமையை பற்றி கூற
நான் பெரிய கவி அல்ல
இருந்தும் சொல்லுகிறேன்
உனக்கென ஒரு கவிதை
என்னை கருவில் சுமந்தவளே
உன்னை நெஞ்சில் சுமக்கின்றேன்
சுமப்பதும் ஒரு சுகம் என்று
என்னை சுமந்து நிருபிதாய்
எத்தனை பொறுமை உன்னில்
எப்படி கற்று கொண்டாய்
உன் பாசத்தில் நினையவிட்டு
கண்ணாய் என்னை காத்தாய்
உன்னை பற்றி மட்டும் யோசிக்க ஏன்
மறந்தாய்
ஒரு வேளை கூட தவற வில்லை
நான் உண்ணாமல் நீ உண்டதில்லை
சிறு தவறு செய்த போதும்
சிறு கோபம் என்மேல் உனக்கு இல்லை
சிரித்த முகமென்றால் உன் முகம்
நினைவில் வரும்
பசி என்றால் நீ துடிப்பாய்
பசி உனக்கல்ல எனக்கு என்று
பாசம் வைக்க பலபேர் உண்டு
பாசம் உயிராய் நினைக்க
உன்னை தவிர யாருண்டு
உன்னை போல் நானிருக்க
எனக்கும் கற்று கொடு
இந்த உலகத்தில் எனக்கு பிடித்த இடம்
என்றும் தாய் வீடு
நல்ல வேளை நான் பெண்ணாய் பிறக்க
வில்லை
பிறந்திருந்தால் கடமை என்று
புகுந்த வீடு அனுப்பி இருப்பாய்
ஆணாய் பிறந்ததனால் ஆயுள்
முழுதும் உன் அன்பில் நனைய
எனக்கு வாய்ப்புண்டு
என் மடியில் நீ தூங்க
நான் தாலாட்ட சில மணி நானும் தாயாய்
இன்னும் ஒரு வரம் வேண்டும்
எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
நீயே என் தாயாக எப்போதும்
எதையும் நினைத்ததில்லை
உனக்காக என்று
எதுவும் ஈடு இல்லை உனகினையாய் இங்கு
Subscribe to:
Posts (Atom)