Pages

Thursday, December 22, 2011

அனைத்து அப்பாகளுக்கும் சமர்ப்பனம்

அனைத்து அப்பாகளுக்கும் சமர்ப்பனம் 

.......அனைத்து அப்பாகளுக்கும் சமர்ப்பனம்........

உழைப்பதற்க்கெனவே
உலகில்
உருவாக்கப்பட்ட
ஒரு உயிர்
அப்பா....

தொகுதிக்கு வரும் எம்.எல்.ஏ வை போலத்தான்
என் அப்பாவின் சிரிப்பு.
எப்போதாவதுதான்
உதடுகள் மேல் உலாவரும்..

அவர் நிம்மதியாய் உறங்கிய தருணங்களும்
நீண்ட நேரம் என்னொடு பேசிய தருணங்களும்
மிக மிக குறைவு.

இமய மலையை விட
இரண்டு மடங்கு சுமை
இதயத்திற்குள் இருந்தும்
என் சிறகுகளை
சீரமைப்பதைப் பற்றியே
சிந்தித்து கொண்டிருப்பார்.


அவர் பட்ட கஷ்டத்தை
பகிர்ந்து கொண்டதில்லை
என் பட்ட படிப்பு முடியும் வரை
பட்டினி போட்டதில்லை..

நான் சிறிது நேரம்
காணமல் போனால்
கண்ணிமைக்கும் நொடிக்குள்
என்னை கண்டுகொள்வார் .

ஒரு...
நிசப்தம்
நிறைந்த நடு நிசிப் பொழுதில்
காணமல் போனார்...
காலமானார்...

எனகிருந்த ஒரே ஒரு
மெலுகுவர்த்தி கரைந்துவிட்டது.
என் இருட்டை வெளுத்த
சூரியன் மறைந்துவிட்டது.

என்னை இழுத்துக்கொண்டு
காலம் வேகமாக ஓடிப்போனது..
எனக்கும் கல்யாணம் ஆனது..

கல்யாண கடனை அடைப்தற்க்கே
பாதி வருஷம் உருண்டோரிச்சு
அதற்குள் கையில் ஒரு குழந்தை
வந்து பிறந்திருச்சு.

என்னை கட்டின பாவத்திற்கு
மனைவிக்கு
மாத்த ஒரு புடவை எடுக்க
மாச சம்பளம் போதவில்ல.

மளிகை பொருளும்
மருந்து செலவும் போக
வாங்குன சம்பளம் மிச்சம்பிடிக்க
வழியுமில்ல.

வசதியா வாழ நினைச்சவனுக்கு
வயித்த கழுவவே
வழியில்லாம போயிருச்சு.

சம்பளம் வாங்குன மறுநாளே
மாச கடைசியாயிருச்சு.

நடுத்தர குடும்பத்தலைவனின்
நரக கசப்பை
நாக்கு ருசிக்க பழகிவிட்டது.

ஆசை மனைவியோட
கொஞ்சி பேசும்
கொஞ்ச நேரமும் விலகிவிட்டது.

என் துயரம் என்னோடு போகட்டும்
என் பிள்ளையாவது
இந்த உலகை ஆளட்டும்.

பத்து வட்டிக்கு கடன் வாங்கி
பள்ளியில என் மகன
சேர்த்த பிறகு
பாவி மனசுக்குள்
முளைத்தது சிறகு.

தட தட வென நாட்கள் நகர்ந்தது
தலை முடி மெல்ல நரைத்தது.

திடிரென ஒருநாள்
நெஞ்சு வலி வர
யாருக்கும் சொல்லாமல்
மருத்துவரை அணுகினேன்.

மாரடைப்பாக இருக்கலாம் என
மருத்துவர் அறிவித்தார்.

அடிகடி அப்பாக்களுக்கு வருகிற
அதே நோய்தான் எனக்கும்.

இருந்தும்
மருத்துவம் தொடர
ஆசையில்லை
மறைக்காமல் சொன்னால்
காசுயில்லை.

கவலையோடு வீட்டுக்கு வரும் வழியில்
கடன் காரன் கழுத்தை நெரிக்கிறான்.
என் நிலையை பார்த்த எல்லோரும்
கைதட்டி சிரிக்கிறான்.

குடும்பம் என்ற ஒன்று இல்லையென்றால்
விசம் குடித்து
என்றோ
என் விதியை முடித்திருப்பேன்.

கண்ணீரை துடைத்துகொண்டு
வீட்டுக்குள் நுழைகிறேன்.

உடைந்த நெஞ்சொடு
ஓய்வு நாற்காலியில்
உட்காருகிறபோது
என் மகன் கேட்கிறான்.

"அப்பா பள்ளியில் சுற்றுலா செல்கிறோம்
பணம் தாருங்கள்"
"இல்லை கண்ணா
அடுத்த முறை போகலாம்" என
அன்பாய் நான் சொல்ல..

மறுபடியும் என் மகன் சொல்கிறான்
"அப்பா உன்னால ஒரு லாபம் ஏது
நீதான் என் வாழ்வின் சாபக்கேடு"


நெஞ்சு வெடித்து
துடிதுடித்து போகிறேன்.
நேர்ந்ததை சொல்ல முடியாமல்
எனக்குள் சாகிறேன்.

என் நினைவுகள் பின் நோக்கி செல்கிறது...

இதே போல்
என் அப்பாவிடம்
நான் நடந்து கொண்டதாய் ஞாபகம்.

இப்படிதானே
என் அப்பா
இலவம் பஞ்சை வெடித்திருப்பார்.
இதயம் நொந்து துடித்திருப்பார்.

ஒரு மகனை பெற்ற எனக்கே
சமாளிப்பது சாகிற வலியை தருகிறதே!

மூன்று பெண்களை கட்டி கொடுத்த
என் அப்பாவுக்கு
எத்தனை சங்கடம் இருந்திருக்கும் ?

என் அப்பாவை போல்
இந்த உலகில் ஒரு ஆள் இல்லை.
இன்று
கண்ணீரால் பாதம் கழுவ
அவர் கால் இல்லை.

அப்பா.....
அப்பா....
அப்பா...

உடைந்த நெஞ்சில்
வடிந்து ஓடும்
கண்ணீரோடு
உங்கள் பாதம் தொட்டு கேட்கிறேன்.
தயவு கூர்ந்து என்னை மன்னியுங்கள்.
உங்களுக்கே
ஆயிரமாயிரம் புண்ணியங்கள்......

----தமிழ்தாசன்----


Tuesday, November 22, 2011

முதியோர் இல்லம்


முவ்வேலை உணவு ஒன்றானது

அழுகை யதார்த்தமானது உனக்கு

அவன் வருகையை எதிர்பார்த்து

கண்கள் துவண்டு போனதே மிச்சம்

உன் கண்களில் கண்ணிற்

கடலை கண்டேன்

அம்மா என்னும் உறவை துறந்து

வழியனுப்பி வைத்த அன்பு

மகனை எண்ணி.....!!!!!!!!!

ஈழ தமிழச்சி ................!

பெண்ணின் அங்கத்தை
பேன்பார்த்த ராணுவம்
கர்ப்பை காமத்தால் ரசித்த
கயவர்களை கண்டு
சீறுகிறாள் நம் செந்தமிழ் தாய்

முடியும் விடியலாய்
மின்னும் வானம்
என் பக்கத்து தமிழன்
ஈழத்தில் ஒளிரும் போது

என்றோ அரை கூவிய
புள்முளைக்காக சீனாவை போல்
பேர் பெற்ற நாடாய் மாறும்

அன்று
என்னை தீட்டிய ராணுவமே
என் தமிழை தீட்டி
தங்க பதக்கம் தரும் நாள்
என்னாள் என்றோவென

காத்திருக்கிறோம்
கண்ணீர் சொட்ட
கரையை தேடும்
ஈழ தமிழச்சியாய் ................!

நட்பா? காதலா?

நட்பா? காதலா?

நட்பு பெரிதா ? காதல் பெரிதா ?
               நண்பன் கேட்டான்

நான் முதலில் கற்றுக் கொண்டது
               நட்பு தான்

நான் இது வரையில் காத்து வருவது
               நட்பு தான்

என்னை நானாக பார்த்தது
               நட்பு தான்

காதலின் இனிமையான பாகம்
               நட்பு தான்

எனினும்
எனக்கு என்னை அறிமுகப்படுத்தியது
காதல் தான்
எனவே,
               நட்பின் காதலும்,
               காதலின் நட்பும்
.
                                                          

Monday, September 12, 2011

மௌனம்

நண்பனே!!!
உன் அருகில் அமர்ந்து ஆயிரம்
வார்த்தைகள் பேச நினைத்தேன்-ஆனால்
என் அருகில் நீ இல்லை
என்னை சுற்றி எல்லாரும் இருக்க
என் மனம் உன்னை சுற்றி திரிந்தது

உன்னுடன் பேச முடியாமல்
கண்ணீர் துளிகள்
ஆறாய் ஓட ,
கண்கள் உன்னை தேட
உன் நினைவுகளுடன் நாட்கள் கழிந்தன.

ஒரு நாள் நீ என்னை தேடி வந்தாய்
உன்னை கண்டதும் பேசும் என் வாய்
பேசமுடியாமல் மௌனம் கொள்ள
உன் அருகில் அமர்ந்த நான் என்
உள்ளத்தின் அசைகளை சொல்லமுடியாமல்
மௌனத்தின் மூலம் வெளிபடுதினேன்


உன் தொலைவில் இருந்து தொலைபேசில்
பேசும் ஆயிரம் வார்த்தைகளை விட
உன் அருகில் அமர்ந்து மௌனமாக
பேசும் வார்த்தை பெரியது

எப்போதும் பேசிக்கொண்டு இருப்பதை
விட பேசாமல் சிலமணி நேரம்
மௌனம் கொள்ளும் மனதில் தான்
சாதனைகள் வளர முடியும்

இந்த உலகில் வீன் பேச்சி
பேசினால் தான் குற்றம்- ஆனால்
மௌனம் என்ற பேசினால் உலகை
வெற்றி கொள்ள முடியும்

என்றும் மௌனமாய் உன்னுடன்
வாழ ஆசை படுகிறேன்
என் அன்பு நண்பன் உன்னுடன்

என் மௌனம் இந்த கவிதையில்
வடிவம் பெற்றுள்ளது
என் நண்பனுக்காக!!!

Sunday, September 4, 2011

நினைவில் நின்றவை

நாம் நினைத்தது நம் வாழ்வில் நடந்து விட்டால்.,நடந்தவைக்கான நினைவுகள் இல்லாமல்போகலாம் .., 


நாம் நினைக்காதவை வாழ்வில் நடந்துவிட்டால்.,
நடப்பவை அனைத்தும் நம் நினைவுகளாகி போகலாம்., 

   - கவி பித்தன் சதீஷ்

தாய்காக சொல்ல முடியவில்லை ஒரு கவிதை

இயற்கைகாக ஒரு கவிதை

செயற்கையாய் வர்ணித்து ஒரு கவிதை

காதலுகென தனி கவிதை

நட்புகென ஒரு கவிதை

கடைசி வரை வர்ணிக்க

வரையறைக்குள் கொண்டு வர

முடியவில்லை தாயின் பாசத்தை

மட்டும் கவிதையில் 

- கவி பித்தன் சதீஷ் 

Monday, August 29, 2011

தண்ணீரும் அழகு தானடா...!

 பல வண்ணம் கலந்த
கலவை மட்டும்
அழகல்ல...

ஒரு வண்ணம்
கொண்ட
வெண்ணிலவும்
அழகு தான்...

ஒரு வண்ணம் கொண்ட
நள்ளிரவும்
அழகு தான்...

ஒரு வண்ணம் கொண்ட
கடல் கூட
அழகு தான்...

இதையெல்லாம்
விட
உன்னிலிருந்தும்
என்னிலிருந்தும்...!
வெளிப்படுகிற
கண்ணீர் என்ற
நிறமில்லா
தண்ணீரும் அழகு தானடா...! 

 - கவி பித்தன் சதீஷ்

என் வாழ்வை அர்பனிப்பேன்

 வழியும் என் கண்ணீரே
என் வழித்துணையாக வருவாயோ.
பிறழும் என் இதயத்தில்
வலிகள் களைந்திட வருவாயோ.
ஈரைந்த மாதமவள் கருவில்
தவத்தில் மகிழ்ந்தோமே.
அந்த இருள் தாண்டி ஒளியில்
விழுந்தும் - பிழையால்
வாழ்வை தொலைத்தோமே?
நான் மீண்டும் சேர்வேனா?
என் தாய் மடியில்.
என் வாழ்வை அர்பனிப்பேன்
ஒரு நொடியில்.!

- கவி பித்தன் சதீஷ்

Monday, August 8, 2011

காதல் தோல்வி போல் நட்பில் தோல்வி இல்லை

 

காதலில் அவளை உயிராய் நினைத்து

தேவதையாய் பாவித்து

கவிதை பல வடித்து நீதான் உலகம்

என்ற போதும் ஏற்க மறுக்கும் மனம்

சில நேரங்களில் உண்மைகாதலும்

தோல்வியில் முடியும்

நட்பில் அதுபோல் எதுவும் இல்லை

எதிர்பார்ப்பு இல்லை ஒரு புன்னகை போதும்

என்றும் நட்புடன் உண்மையாய் இருந்தால்

வாழும் நட்பு எந்நாளும்

நட்பில் தோல்வியே இல்லை

நட்பு நம்மை தோர்க்க விடுவதில்லை 

எழுதியவர் :ருத்ரன் 

 

Sunday, August 7, 2011

பெண் என்பவள் !!!

வெட்கப்பட
தெரிந்த
ஒரு அழகிய
மலர்!!!

நிழலும் நானும்!

என்னோடு உலகம் வந்த நான் என் நிழல்!
என்னையும் பெரிதாய் காண்பித்தவன் நீ
இருந்தும் என் காலடியில்தான் நீ!
என்னை அறிந்தும் நீ என்னோடு
அது ஒன்றேபோதும் உன் பெருமையைச் சொல்ல!
என்னை பெரிதாக்க படு பள்ளத்திலும் வீழ்வாய்!
உன்னை பெருமை படுத்த நான் எங்கு விழுவேன்!
நிழலாய் உள்ள நிஜங்களின் காலடியில்!

அம்மாவுக்காக ஒரு கவிதை

அம்மா என்று அழைத்ததையும்

கவிதையாய் நீ உணர்ந்தாய்

என்னை முதலில் கவி என்று

சொல்லி நீ மகிழ்ந்தாய்

உன் பெருமையை பற்றி கூற

நான் பெரிய கவி அல்ல

இருந்தும் சொல்லுகிறேன்

உனக்கென ஒரு கவிதை

என்னை கருவில் சுமந்தவளே

உன்னை நெஞ்சில் சுமக்கின்றேன்

சுமப்பதும் ஒரு சுகம் என்று

என்னை சுமந்து நிருபிதாய்

எத்தனை பொறுமை உன்னில்

எப்படி கற்று கொண்டாய்

உன் பாசத்தில் நினையவிட்டு

கண்ணாய் என்னை காத்தாய்

உன்னை பற்றி மட்டும் யோசிக்க ஏன்

மறந்தாய்

ஒரு வேளை கூட தவற வில்லை

நான் உண்ணாமல் நீ உண்டதில்லை

சிறு தவறு செய்த போதும்

சிறு கோபம் என்மேல் உனக்கு இல்லை

சிரித்த முகமென்றால் உன் முகம்

நினைவில் வரும்

பசி என்றால் நீ துடிப்பாய்

பசி உனக்கல்ல எனக்கு என்று

பாசம் வைக்க பலபேர் உண்டு

பாசம் உயிராய் நினைக்க

உன்னை தவிர யாருண்டு

உன்னை போல் நானிருக்க

எனக்கும் கற்று கொடு

இந்த உலகத்தில் எனக்கு பிடித்த இடம்

என்றும் தாய் வீடு

நல்ல வேளை நான் பெண்ணாய் பிறக்க

வில்லை

பிறந்திருந்தால் கடமை என்று

புகுந்த வீடு அனுப்பி இருப்பாய்

ஆணாய் பிறந்ததனால் ஆயுள்

முழுதும் உன் அன்பில் நனைய

எனக்கு வாய்ப்புண்டு

என் மடியில் நீ தூங்க

நான் தாலாட்ட சில மணி நானும் தாயாய்

இன்னும் ஒரு வரம் வேண்டும்

எத்தனை ஜென்மம் எடுத்தாலும்

நீயே என் தாயாக எப்போதும்

எதையும் நினைத்ததில்லை

உனக்காக என்று

எதுவும் ஈடு இல்லை உனகினையாய் இங்கு

Thursday, July 7, 2011

காதல் எங்கு சென்று கொண்டிருக்கிறது...

கண்ணால் கண்டு
பக்கமோ தூரமோ
பார்வைகளால் பரிமாறப்பட்ட காதல்
இன்று எங்கு சென்று கொண்டிருகிறது...

காதலை கண்கள் கடத்திய
காலம் சென்று இன்று அதை
காமம் கடத்திக்கொண்டு இருக்கிறது
ஓஹோ இதுதான் காதலா ?

காதலர்தினம் என்று இன்று
வெட்டவெளிகளில் விரசங்கள்
காதலில் காமம் பார்த்த காலம் சென்று
காமத்தில் இன்று காதலை காணமுடியவில்லையே

காதலர்தினம் என்பதன் அர்த்தம்தான் என்ன
உண்மையான அன்பை இரு இதயங்கள்
பரிமாரிகொள்ளும் ஒவ்வொரு நாளும்
காதலர்தினம் தானே....

பக்குவபட்ட முதல்காதலை
மறக்கமுடியாத காலம் சென்று
பதினெட்டு வயதிற்குள் இன்று
பத்துகாதலை பார்த்துவிட்டார்களே ..

பதினேழு வயதை தாண்டாத
காதல் என்றால் என்ன என்று கருத்து அறியா
பருவபாலகன் காதல் தோல்வியென
பத்து கவிதைகள் புனைந்து விடுகிறானே...

முத்தத்தில் முதல் காதலை முடித்து
காம சத்தத்தில் மறுகாதலை மடித்து
ஒத்துவரவில்லை என மூன்றாவது கடந்து
அடுத்த காதலுக்கு ஆயதம் ஆகினரே ...

தன் காதலைப் பேண சிதைக்கு
செல்ல துணிந்த காதல் எங்கோ சென்று
சதைக்கு ஏங்கி சலித்துப்போன
காதல் உண்மை காதல் தானோ ..

மொத்தத்தில் காதலை குற்றம் சுமத்தவில்லை
அத்திப்பூத்தார்ப் போல அங்கங்கே
நல்ல காதலும் நடந்தேறியே வருகிறது
காதலியுங்கள் உங்கள் காதலை காதலாக மட்டும்..

Tuesday, June 28, 2011

உன் தன்னலமற்ற அன்பினால் ,,,,

உன் பசி மறைத்து, என் பசியற்றினாய்
என் சந்தோஷத்தில் நீ சந்தோசம் அடைந்தாய்
என்னகொன்று என்றால்,நீ துடித்துப்போவாய்
எதுக்கு அம்மா உனக்கு என் மீது இவ்வளோ பாசம்.,

உனக்கு நான் என்ன செய்தேனென்று என்மீது இன்னும் அன்பு கொண்டிருக்கிறாய் .

விளையாட்டுக்கு கூட நீ என்மீது கோபம் கொண்டதில்லை
உன் அன்பால் என்னை வழிநடத்தினாய்,உன் பாசத்தால் பசியற்றினாய்.

எனக்கு நீ இமையாக இருந்தும் ,நான் உனக்கு சுமையாக தெரியவில்லை .,


எனக்கு காய்ச்சல் வந்தது உனக்கு தெரிந்தால்
இரவு முழுவதும் தூங்க மாட்டாய் என்று மறைத்தும் ,உனக்கு தெரிந்து போகும் என் முகத்தைப்பார்த்து ,அப்பொழுது நீ என்மீது காட்டும்
அன்பை பார்த்து காய்ச்சல் தொடர்ந்தால் என்னவென்றுத்தோணும் எனக்கு .,

நான் எங்காவது வெளியில் சென்று தாமதமாகினால்.,அதுவரை நீ நரகத்தை அனுபவித்து கொண்டிருப்பாய் .,
நீ இருக்கும்போது இறைவன் எதற்கு ,நீ இருப்பதினால் துன்பமில்லை எனக்கு ,,,,,
மறுபடியும் கேட்கிறேன் ????எதுக்கு அம்மா உனக்கு என் மீது இவ்வளோ பாசம்.,
அதுசரி ,நான் யாரேன்றுத்தெரியாமலே,என்னை பத்துமாதம் சுமந்தாயே ....என்னை புரிந்தப்பிறகும் என்னை வாழ்நாள் முழுவதும் சுமக்கிறாயே...,,,இதற்கு ஈடு என்ன செய்ய முடியும் என்னால்
காலங்கள் மாறினாலும் .,பல மாற்றங்கள் நிகழ்ந்தாலும் .,உன் அன்பு மாறாது அம்மா .,எனால்
மாறுவதற்கு நீ என்ன மனிதப்பிறவியா .,
உன் பாதங்கள் தொடும்போது தெரியும் நீ எனக்காக நடந்த தூரம் எவளவென்று.,


மருஜென்மதிலும் நீயே என் தாயாக வேண்டும்.,அப்படி நடக்குமானால் இப்போதே இறப்பதிற்கு கூட தயாராக இருக்கிறேன் .,உன் தாலாட்டை கேட்க.,,


உன் அன்பை ஈடு செய்ய என்ன இருக்கிறது என்னிடம் உன் அன்பை தவிர.,

Monday, June 20, 2011

உறங்கபோகும் போது தான்

உன்
நினைவுகளை
பரிசளித்து போனாய்...
இரவு
உறங்கபோகும் போது தான்
தெரிந்தது
பதிலுக்கு உறக்கம்
பறித்து போனாய் என்று...

நான் தொலைக்க போகிறேன் .....

நான் தொலைக்க போகிறேன் ..... 

தினமும் தேடி கொண்டுதான் இருக்கிறேன் ...
தொலைந்து போன இதையத்தை அல்ல ...
யாருக்காக தொலைக்க போகிறேன் என்று ..
என்றும்
இதையதுடன்
உங்கள்
நண்பன் ..


Sunday, June 12, 2011

அன்புள்ள அம்மாவுக்கு ஒரு கடுதாசி.....!!!!

அன்புள்ள அம்மாவுக்கு ஒரு கடுதாசி.....!!!!



(அன்னையை பிரிந்து வேலைக்காக ஊர் விட்டு ஊர் வந்த ஒருவனின் மனதின் வலிகள் )
...


அம்மா...

எழுத வார்த்தைகள் இல்லாமல்

தொடங்குகிறேன்...!!



பருவம் வரை பக்குவமாய்

வளர்த்து விட்டாயே



ஊர் சண்டை இழுத்து வந்தாலும்

உத்தமன் என் பிள்ளை என்று

விட்டு கொடுக்காமல் பேசுவாயே

அம்மா..!!



நீ சொன்ன வேலைகளை விளையாட்டாய்

தட்டி சென்ற நாட்கள்..!!



செல்லம், தங்கம், "மள்ளிகை கடைக்கு "

போய்வாட என நீ சொல்ல

இந்த வயதில் கடைக்கு போவதா?..

என நான் சொன்னேன்..!!



இன்றோ..

இங்கே கண்ணுக்கு தெரியாத

யாரோ ஒருவருக்காக ஓயாமல்

வேலை செய்கிறேன் அம்மா..!!



நெற்றி வியர்வை சிந்த பரிமாறும்

உந்தன் கை பக்குவ உணவு

நான் அறிந்த அமுதத்தின் அசல்தான்.

இருந்தும் தவறவிட்ட பல நாட்கள்..!!



கண்ணு "பத்து நிமிஷம்" பொறுத்துக்கோடா

சூடா சாப்பிட்டுட்டு போய்டுவ என நீ சொல்ல

பத்து நிமிஷமா..!, நான் வெளியல

சாப்பிட்டு கொள்கிறேன் என நான் சொல்லி

கிளம்பிய தருணங்கள்..!!



இன்றோ..

இங்கே உப்பு.,சப்பில்லா சாப்பாடு

சாப்பிடும் போதே கண்கள் களங்க

இன்று காரம் கொஞ்சம் அதிகம்

போய்விட்டது என கடைக்காரர்

சொல்ல..!!



என்னக்கு மட்டும் தெரிந்த

உண்மை..!!

பாசமுடன் நீ அளித்த உந்தன்

ஒற்றை பிடி சோற்றுக்காக இப்போது

ஏங்குகிறேன் அம்மா..!!



அன்றைய பொழுதில் சுற்றி திரிந்த நாட்கள்

வரண்ட தலை முடியில் வலுக்கட்டாயமாய்

தடவி விடும் எண்ணெய் துளிகள்

வேண்டா வெறுப்பாய் நிற்கும்

நான்..!!



இன்றும்

என் தலை முடி சகாராதான் அம்மா

உந்தன் கை ஒற்றை எண்ணெய்

துளிக்காக ஏங்கி நிற்கிறது..!!



ஆசையால்..

மழையில் நனைந்து வர

முனுமுனுத்தபடி துடைப்பாய்

உந்தன் முந்தானையில்



இப்போது நனைகிறேன்

ஆசையால் அல்ல, ஏக்கத்தால்..,



அத்தி பூக்கும் தருணமாய்..!

என்றாவது ஒருநாள் என்னை

திட்டும் நீ..! அந்த நொடியில்

எதிர்த்து பேசினேனே அம்மா..!!



இன்றோ..

இங்கே உயர் அதிகாரி திட்ட

சுரணை இல்லாத கல்லாய் நிற்கிறேனே

அம்மா..!!

என்னை மன்னித்துவிடேன் அம்மா..!!



தொலைபேசியில்...

உனக்காக, தேடி திரிந்து பார்த்து,

பார்த்து வாங்கிய புடைவையை பற்றி

சொல்வதற்கு முன் உன் வார்த்தைகள்

வருமே..! கண்ணு உனக்காக

ஒரு சட்டை வாங்கிருக்கேன் வரும்போது

எடுத்துகிட்டு போடா என்று..!!



எப்படி அம்மா சொல்வேன் எந்தன்

அன்பையும் , எண்ணத்தையும்



என் ஏக்கங்களை சொல்ல துடிக்க...

கைபேசியை எடுத்து , அம்மா....என்று

சொல்லும் நொடிகனத்தில் மாறுகின்றது

எந்தன் வார்த்தைகள்., நான் இங்கு

நலமாய் இருக்கேன்..!நீ எப்படியம்மா

இருக்க..!!!



என் அன்னை ஆயிற்றே...

எந்தன் ஒற்றை வார்த்தையில்

புரிந்து கொள்வாய் எந்தன்

மனதை..!!



நான் சொல்ல மறந்த வார்த்தைகளை

பக்குவமாய் பட்டியளிடுவாய்..,

"வேலைக்கு ஒழுங்கா சாப்டு கண்ணு "

"மறக்காம எண்ண தேச்சி குளிடா"

"ரோட்ல பத்திரமா பாத்து போடா"

" உடம்ப பாத்துக்கோடா தங்கம் "



என் கண்கள் கட்டுபடுத்திக் கொண்டாலும்

என் இதையம் மட்டும் கதறி அழுகிறதே

அம்மா..!!



உன்னை என்னிடம் இருந்து பிரித்த

இந்த வாழ்க்கையை திட்டுவதா..?

இல்லை..

உந்தன் மேல் நான் வைத்திருக்கும்

பாசத்தை காட்டியதற்கு நன்றி சொல்வதா.?

தெரியவில்லையே அம்மா..!!



உனக்காக உயிரற்ற பொருட்களால்

அன்பு சின்னம் அமைத்து என்ன

பயன்..!!



உதிரம் என்னும் பசை தடவி

எலும்பு என்னும் கற்கள் அடுக்கி

உன் அன்பின் சின்னமாய் இருப்பேன்

அம்மா என்றும் உந்தன்

காலடியில்...!!!

Thursday, March 31, 2011

சுமக்கும் தாயாய் நட்பு....


துன்பங்களை

நம்மோடு சரிபாதி

சுமக்கும் தாய்.....

நட்பு...


நான் விரும்பி நேசித்த நட்புக்காக.....


நான் விரும்பி நேசித்த நட்புக்காக
நான் விரும்பி செய்த செயல்களை - மறந்து
உதாசீனப்படுத்தும் போது
இமையோரம் வரும் கண்ணீர் துளிகள்
எனக்கு மிகவும் பிடிக்கும்

உதாசீனப்படுத்திய நட்பு - மறந்து
திரும்ப வந்து உறவாடும் போது
இதயத்தில் வரும் பூரிப்பும்
எனக்கு மிகவும் பிடிக்கும்

காரணம் உண்மையான அன்பு நட்பின் பக்கம்

என் நண்பனுக்காக ஒதுக்குவேன்

 

என் இதய துடிப்பின்
இடைவெளி நேரம் கூட
என் நண்பனுக்காக ஒதுக்குவேன்

அவன் அன்புக்காக


என்றும் என் துடிப்பாக நண்பர்கள்....

இலவசமாய் கொடுங்கள் நம் நாட்டை

இனி உலகில் எதிரியை அழிக்க

ஆயுதம் தேவை இல்லை

இலவசமாய் கொடுங்கள்

நம் நாட்டை

உன் பணம் உனக்கே தானம்

உன்பேரில் கடன் உனக்கு இலவசம்

உன் சம்மதத்தோடு

உன்னையே விற்கிறான்

உலக வங்கியிடம்

மகாத்மா இன்னொரு ஜென்மம்

எடுத்து வா

இலவசம் வாங்க அல்ல

இன்னொரு விடுதலை வாங்க

இந்திய ரசிகன்!

பந்துகளா!
எதிரணி வீரனா!
பறந்துவிடுங்கள் எல்லை தாண்டி!

வீரமா!
விளையாட்டா!
ஓடி பிழைத்திடு வீட்டுக்கு!


Saturday, March 12, 2011

கிராமத்து நண்பனுக்கு

 

கண்மூடி யோசிக்கிறேன்
காலங்களின் மாற்றத்தில்
நம் வாழ்க்கையும்
மாறித்தான் போய் இருக்கிறது

ஒய்யாரமாய் நாம் நடந்து போகும்
ஒற்றையடி பாதையில்
டிராபிக் போலீஸ் போல் நின்ற
அந்த பனை மரம்
கொஞ்சம் வாடி போய் இருக்கிறது
வா நாம் வந்து இருக்கிறோம் என்று சொல்வோம்
அது வசந்த புன்னகை
பூத்து விடும்

கண் ரத்தமாய்
மாறினாலும்
கரை ஏற மனது இல்லாமல்
ஆட்டம் போட்ட
அந்த கம்மாய் குளம் கொஞ்சம்
உடம்பை குறைத்து
இருக்கிறது
இங்கேயும் வந்து விட்டார்களா
பட்டணத்தார்கள்
விலை நிலத்தையும்
கூட விட்டு வைக்காதவர்கள்
இதை மட்டுமா விட்டு விடுவார்கள்
நண்பா....

பட்டணத்து வாழ்க்கையில்
பக்கத்து வீட்டு நபர்கள் கூட
யார் என்று தெரியாமல்
போர் அடித்து விட்டது

பார்த்து சிரிக்க கூட
பைசா கேட்பார்கள் போல

கிராமத்து வாழ்க்கையில்
சிட்டு குருவி போல்
பரந்த நாம்
இன்று மாட்டி கொண்டோம்
இயந்திரமான வாழ்க்கையில்

யாரை குறை சொல்ல ....

எப்போவது
நம் கிராமத்திற்கு வரும்
போது எல்லாம்
தாயின் மடியில்
படுத்து உறங்கின சுகம் ...

நம் நட்பின் சுவடுகளை
சுமந்து கொண்டு அலையும்
நம் கிராமம் என்றும்
அழியாது
நம் நினைவை விட்டு
நம் நட்பை போல்
நீங்காத உறவாய் இன்றும் என்றும்

Sunday, February 13, 2011

காதலர்தினம் வரை

காந்தமும் காதலும் ஒன்றடி
கண்களில் பார்வையை மாற்றடி

துருவங்கள் ஒன்றானால் துன்பமே
துடிக்கும் இதயம் ஒட்டிகொண்டால் இன்பமே

காந்தமாய் காதலர் தினம் என்னை இழுக்க
கட்டழகு இரும்பு இதயம் திறந்து வாடி

ஈரம் பட்டால் இரும்பு கூட துருவாகும்
இதயம் சுட்டால் துருகூட தூளாகும்

காந்தம் பட்டால் இரும்பு கூட காந்தமாகும்
காதல் பட்டால் இதயம் கூட காதலாகும்

மின்சார காந்தம் கூட இருட்டில் கிடக்குது
உன்னை சேரா காதல் கூட அப்படி இருக்குது

இருட்டை போக்க இரும்பில் இருந்து பொறி பறக்குது
இதனை பார்த்த காந்தம் கூட இரும்பை கட்டி கிடக்குது

எந்தன் கண்ணும் இருட்டில் தானே கனவில் இருக்குது
இதனை போக்கும் உந்தன் கண்கள் ஒளியில் மறைக்குது

காந்தம் இதயம் கலந்து ஒரு காதல் சேருமா
காத்திருக்கும் காலம் கண்ணில் ஈரம் சேர்க்குமா

இரும்பில் விழுந்த இரண்டு துளிகள் துரு பிடிக்குமா
இதயம் இரும்பாய் இருந்து இதனை படிக்குமா

காந்தம் போல காதல் வந்து கைபிடிக்குமா
கடைசிவரை இரும்பு இதயம் கண்திறக்குமா?


இனையதளதில் வந்து சேர்ந்த உன் தகவல்

மிதந்து வந்த
பறவையின் இறகு,
இனையதளதில் வந்து
சேர்ந்த உன்
தகவல் இரண்டுமே
அழகுதான்
இக்கணத்தில்
உன்னை விட!


Thursday, February 10, 2011

வர்ணிக்க வார்த்தை இல்லை..!!

கருவறை இல்லாத தாய்..!
கண்டிப்பில்லா தந்தை..!
தோல் சாயும் ஆசான்..!
கண்ணெதிரே கடவுள்..!
இப்படி...

தாய், தந்தை, ஆசான், கடவுள்,
ஒன்று சேர...?

நட்பாய்...!

தமிழில் அத்துணை சிறந்த வார்த்தைகள்
இருந்தும்,
இன்னும் சிறந்த வார்த்தையை
தேடுகிறேன்...

நட்பை வர்ணிக்க...!!!!!


Sunday, February 6, 2011

அனாதைகள் கடவுளின் குழந்தைகளாம்....

தேனெடுக்கும் நோக்கத்தில் மட்டுமே....
பூவை தேடும் வண்டு....
இளமை வேகத்தில்...
இரு நிமிட இன்பத்திற்கு சேரும்...
இரு ஜீவன்கள்....
இதனால் உருவானது..
மழலை...
இவர்களுக்கு அது பிடித்திருந்தால்.....
வைப்பார்கள் பெயர்...
இல்லையேல்...
இந்த உலகம் வைக்கும்...
அனாதை என்று....
ஓர் அணு உயிராகி... உருமாரி ...உலகில்...
உலவுகிறது ஆதரவற்று...
தவறு செய்தவன் மனிதன்....
பலியோ...
ஆண்டவன் மேல்....

அனாதைகள் கடவுளின் குழந்தைகளாம்....


உன் அழகை ரசிப்பதற்கு.....

 

உன் அழகை ரசிப்பதற்கு மின்மினியே
காத்திருக்கும் கண்கள் பல விழித்திருந்து
மிகையில்லை எழுதுகிறேன் நினைவிற்கு
மின்மினியே உன்னழகு இரவிற்கு
மீண்டும் நீ வந்திடுவாய் மனதிற்கு.........

Thursday, February 3, 2011

உன்னை போலவே...

உன்னை போலவே அழகு..
உன்னை போலவே சிரிப்பு..
உன்னை போலவே கவிதை நடை..
ஆனால்
என்னை போலவே எப்போதும்
அழுது கொண்டு இருக்கிறது
உன் குழந்தை..


உன் பிரிவால்

அன்பால் சிறை வைத்தேன் உன்னை
நீயோ தனிமையில் என்னை
சிறை வைத்து தப்பிச் சென்றுவிட்டாய்!

கனவில் கூட நான் கண்டதில்லையே
உன்னைப் பிரிந்து வாழ்பேன் என்று
இன்று நிஜமே பிரிவானதோ!

இதயத்தில் வலி உன் பிரிவால்
என் கண்களில் நதி அந்த வலியால்
சொல்லிப் போ எனக்கு ஓரு வழி...........!!!


Tuesday, February 1, 2011

என் அப்பா

அப்பா
உள்ளத்தில் உண்மையின் அழகன்
நிம்மதி தொலைத்து,
தினம் தோறும் உழைக்கும் தலைவன்
பேர் சொல்ல மட்டும் பிள்ளைகளின் கைத்தடி
மனைவி பிள்ளைகளின் நிம்மதியியே தன் வாழ்வென நினைக்கும் தூயவன்
கனவு கண்டிடுவார் நினைவெல்லாம் குடும்பத்திற்காகவே
என்ன ஒரு கலக்கம்
கண்டவர்கள் மேல் என்ன நடுக்கம்
அடுத்தவர் பார்வை தன் செல்வங்கள்மேல் படாது என்ன ஒரு காவல்
என்ன செய்தோம் அந்த காவலனுக்கு நாம் கடைசிவரைக்கும்
பாசத்தை விட அவர் நம்மில் கண்டதுதான் என்ன
கடைசிவரை கையேந்த விட்டதும் இல்லை எம்மை கண்கலங்கிப்பார்த்ததும் இல்லை
என் அப்பா நான் செய்ததெல்லாம் தப்பப்பா உங்களை நான் -
தாங்காது விட்டது ஏன் அப்பா?


மௌனமாய் நிற்கின்றேன்!

நேசத்தை விழிகளில் தேக்கி
ஆசையுடன் நீ பேசும் போது
துடிக்கும் உன் இமைகள்
சொல்லி விட்ட காதலைக் கண்டு
நானும் மௌனமாய் நிற்கின்றேன்.........!!!


Monday, January 31, 2011

மரணத்தை நோக்கி

மரணத்தை நோக்கி
நகரும் நம் வாழ்கையில்
நம்மை வாழ சொல்லி
வற்புறுத்துவது
காதலும்,நட்பும் தான்...
நட்பை நேசி.
காதலை சுவாசி...


Sunday, January 30, 2011

சொர்க்கத்தில்

வாழும் போதே புண்ணியம் செய்சொர்க்கத்துக்கு போவாய் என்றுஎன்னிடம் பலர் சொல்கிறார்கள்நான் இப்பவும் சொர்க்கத்தில் தான்இருக்கிறேன் என்பதை அறியாமலே 

....ஆமாம் நான் தான் உன் இதயத்தில்
இருக்கிறேனே ..

Thursday, January 27, 2011

பிரிவின் ரணங்கள்....

யாராலும் நிரப்ப முடியாமல்
நீ விட்டு சென்ற தனிமையின்
வெறுமையான கணங்களை
என் கவிதைகளால் நிரப்ப முயன்று
முடியாமல் போய்
கடைசியில் ...........
என் கவிதைகளிலும் உன்னை மட்டுமே நிரப்புகிறேன்......

Saturday, January 22, 2011

கண்ணீரை பிடிக்கும்..

கண்ணீரை பிடிக்கும்
அது என் கவலைகளை
தீர்க்கும் வரை.
காதல் எனக்கு பிடிக்கும்
அது உண்மையாக இருக்கும் வரை...!!!


Friday, January 21, 2011

ஏமாற்றங்களே வாழ்க்கையாகிப்போனதால்.

ஏமாற்றங்களே
வாழ்க்கையாகிப்போனதால்..
அதைப்பற்றிய ஏக்கங்கள்
என்னிடமில்லை..!
ஆனால்
அதன் பெறுமதியை பற்றி
என்னிடம் கேளுங்கள்
அன்று, உங்களுக்கும்
புரியும் இவன்
பட்ட துன்பத்தின் நீளம்..........!!!! 

எழுதியவர் : சதீஷ் 

 


Wednesday, January 19, 2011

நட்பு உணர்வுகளின் உண்மை

கருவிலே ;
தாயவள் சொன்னாள்
நட்பின் தலையங்கத்தை ,

நட்பு
ரத்த அணுக்களில்
வி(ழு)ந்து முளைத்த
உயிர் அணுக்கள் ;

நட்பு
இதய வாயிலில் இளைப்பாற
கதவு திறக்கும்
இசைக்காற்று ;

நட்பு
மூளை தேசத்தில் பாதுகாக்கப்பட்ட
காலப்பெட்டகம் ;

நட்பு
பாதச்சுவடுகளை கண்காணிக்கும்
கணிப்பொறி;

நட்பு
தசைகளுக்குள் தைக்கப்பட்ட
பூங்காவனம் ;

நட்பு
எலும்புகளுக்கும் , நரம்புகளுக்கும்
இடையே பூட்டப்பட்ட
பூ விளங்கு

நட்பு
உயிர் மொழியை கண்டறிய
மனம் எழுதும்
புதுக்கவிதை ;

நட்பு
வெறும் வார்த்தையல்ல ,
தொடரும் வாழ்க்கையின்
உயிர் கூட்டல் ;

நட்பு
சமுதாயத்தின் ஆணிவேர்

நட்பு
உணர்வுகளின் உண்மை
உறவுகளின் உன்னதம்

எழுதியவர் :பூவிழி

Monday, January 17, 2011

கண்ணீர் கவிதை

என்ன மறந்து விட்டேன்
பெண்ணே....!
எத்தனை முறை
அழுதேன் என்று....!
காதல்
இருக்கும் வரை
இது போன்ற
கண்ணீர் கவிதைகளும்
இருக்கும்......!
இங்கு வார்த்தைகள்
மட்டுமே
மாறுகின்றன.....!
ஆனால்
வலிகள் மாறவில்லை.....!

Friday, January 14, 2011

வாழ்த்து

அகிலமெங்கும் அமைதி பொங்க
ஆள்பவர் மனதில் மனித நேயம் பொங்க
மனையெங்கும் மகிழ்ச்சி பொங்க
மண்ணிலெங்கும் கதிர் மணிகள் பொங்க
அனைவரிடமும் ஆன்மிகம் பொங்க
கற்பக மூர்த்தியின்
பொற் பாதம் பணிந்து
அனுப்புகிறேன் ஒரு வாழ்த்து !!!
இனிப்பான கரும்பின்
சுவையையும் சேர்த்து !!!!!

Thursday, January 13, 2011

என் கவிதையே

உன்னைப் பற்றி
ஓராயிரம் கவிதைகள்
எழுதிவிட்டேன்..
சந்தோசப் பட்டுக்கொண்டன
கவிதைகள்
உன்னைப் பற்றி
எழுதியதற்காக...

"அன்றைய காதலர்கள்"

பெண்ணே...!
இன்று உன் மொபைல்க்கு
என்னை காதலிக்கிறாயா
என்று ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பிவிட்டு
இரண்டு நிமிடங்களுக்கு மேல் ஆகியும்
பதில் வரவில்லை என
கோபமாக நான்
இருந்து கொண்டிருக்கும் வேளையில்....
என் நினைவில்
வந்து போனார்கள்
அன்றைய தினத்தில்
கடிதத்தின் மூலம்
காதலிக்கிறாயா என்று
கேட்டுவிட்டு
பல நாட்கள் காத்துக் கிடந்த
"அன்றைய காதலர்கள்" 

 

Wednesday, January 12, 2011

நட்பு ...

ஒரு இதயத்தையும் பறித்துக் கொண்டது காதல்!
எனக்காக ஒரு இதயத்தையே பரிசளித்தது நட்பு!
கஷ்டங்களில் யோசித்தது காதல்!
யோசிக்காமல் கைகொடுத்தது நட்பு!
துயரங்களை நோக்கி இழுத்துச்சென்றது காதல்!
உயரங்ளை நோக்கி அழைத்துச் சென்றது நட்பு!
கட்டுப்பாடுகளை தளர்த்த முயற்சித்தது காதல்!
கடமைகளை உணர்த்த முயற்சித்தது நட்பு!
என் இலட்சியங்களை கனவாக்கியது காதல்!
என் கனவுகளை இலட்சியமாக்கியது நட்பு!
காயம் தரும் காதல் வேண்டாம்!
நன்மை தரும் நட்பைக்கொடு இறைவா 

 எழுதியவர் :செமினா

Monday, January 10, 2011

உயிர் நண்பர்கள்

 அவசரமாக புறப்பட்டு
ஆபத்தில் சிக்கினேன் சாலையில்
அவசர உதவிக்கு 108 அழைக்கப்பட்டது
108 ஐ விட விரவாக
வந்து சேர்ந்தனர் எனது நண்பர்கள்....

எழுதியவர் : சதீஷ் 

 

Sunday, January 9, 2011

உன் நினைவாலே!

என் நினைவுகள் ஒரு நாள் உன்னைச்சேரும்
உன் நினைவாலே வாடுவது நானல்ல
என்னுள் இருக்கும் நீதான் ..!!

எங்கோ தூரத்தில் நீ இருந்தாலும்
உன் நினைவாலே என்னை
ஆட்டுவிப்பதும் ஏனோ...!!

உன் நினைவுகள் என்னை சேர்வதால் தான்
உன் நினைவாலே நானும் வாடுகிறேன்
உன் நினைவே என்னுயிரை தாங்குகிறது..........!!!!!!!

எழுதியவர் : சதீஷ் 

Friday, January 7, 2011

தன் குழந்தையிடம்.தோல்வி சுகமானது !!!

 தோற்பது சுகமானது
தன் குழந்தையிடம்.

நாலுகாலால் தவழும் போதே
ஓட்டத்தில்
ஆமையாவது
அம்மாக்களுக்கு தனி சுகம்.

யார் முதலில் எனும்
சாப்பாட்டு மேஜைகளில்
தோற்றுத் தொப்பியடிப்பது
அப்பாக்களுக்குச் சுகம்.

தோற்பது சுகமானது
தன் குழந்தையிடம்.

இவன் தான் காதலன் என
பிடிக்காத ஒருவனை
அவள்
அறிமுகப் படுத்தும் வரை !

Thursday, January 6, 2011

எனக்கு . . . யார் ஆறுதல்?

அழுகின்ற குழந்தைக்கு - அம்மாவின் ஆறுதல்
ஆசைப்பட்ட குழந்தைக்கு - அப்பாவின் ஆறுதல்
இமயத்தை கேட்டவனுக்கு - இனிமையான ஆறுதல்
ஈர்ப்பு விசைக்கு - ஈகையான ஆறுதல்
உலகின் ஒளிக்கு - உணர்ச்சியாய் ஆறுதல்
ஊமையான உறவிற்கு - ஊக்கம் ஆறுதல்
எளிமையான வாழ்விற்கு - எதார்த்தம் ஆறுதல்
ஏக்கமான இதயத்திற்கு - ஏனிந்த ஆறுதல்
ஐயமில்லா மனதிற்கு - ஐக்கியம் ஆறுதல்
ஒற்றுமையான உயிர்களுக்கு - ஒருமித்த ஆறுதல்
ஓவியனின் உள்ளத்திற்கு - அவன் ஓவியமே ஆறுதல்
ஒளவையின் காலத்திற்கு - ஒளவையே ஆறுதல்
அத்தனைக்கும் அற்புதமான ஆறுதல்
எனக்கு . . .
யார் ஆறுதல்?

Wednesday, January 5, 2011

வெற்றி

தோல்வி என்பது தள்ளி போடப்பட்ட வெற்றி தான்....
அதற்காக வெற்றி அடைவதற்கான நாட்களை மட்டும் தள்ளி போட்டு விடாதே......

எழுதியவர் :வசுகிரஜெந்திரன் 

 

Tuesday, January 4, 2011

நிச்சயம் ஒரு நாள் மாறும்.

வலிக்கின்ற
இதயமும்,
வடிக்கின்ற கண்ணீரும்,
நிச்சயம் ஒரு நாள் மாறும்..
உண்மையான
அன்பும்,உறுதியான
நம்பிக்கையும் இருந்தால்.

எழுதியவர் : கவிதா 

 

Monday, January 3, 2011

கடைசி வரை தொடர வேண்டும் நம் உறவு....

 

அறிமுகம் இல்லாமல் வந்தோம்
அடிகடி பேசி கொண்டோம்
உறவுகளுக்கு மேலே,
உயிர் ஆனோம் .

காலங்கள் கடந்து சென்றாலும்
கடைசி வரை தொடர வேண்டும்
நம் உறவு.

எழுதியவர் : கவிதா 

Sunday, January 2, 2011

இதயம் மட்டும் உன்னைத் தேடி துடிக்கிறது

இரவுகள் கண்களைக் கொள்ளை
கொள்ளும் போது உன்
நினைவுகள் என்னைத்
தாலாட்டி செல்கின்றது...
உன் நினைவுகளோடு
தூங்குகின்றன என் கண்கள்
ஆனால் இதயம் மட்டும்
உன்னைத் தேடி துடிக்கிறது
நீ இல்லை என்றால்
நின்று விடும் என்
இதயத் துடிப்பு..............!!!!!!!!!!!

எழுதியவர் :ரெங்கா

 

நினைவுகள்

நினைவுகள் இல்லை என்றல்
இதயமும் ஒரு கல்லறைதான்....!


எழுதியவர் : சதீஷ் 

என் காதல் வலி..

என் காதல் வலி.. 

பெண்ணே...!
உன்னைப் பார்க்கும் போது
பேசத் துடிக்கும் வார்த்தைகள்
மெளனமாகி விடுகின்றது
பெண்ணே....
உன்னை நினைத்து மரணித்த போது
என்னை ஆழமாய் விரும்பினாய்.
நான் ஆவியாய் அலைகின்றேன்.
பெண்ணே....
மறு ஜென்மம் மலரும் போது
நான் நீயாகவும்... நீ... நானாகவும்
அப்போ புரியும் என் காதல் வலி............!!!!!!!!!!!


0


எழுதியவர் :ரெங்கா